Sunday 10 May 2015

நதிகளை காப்பாற்றும் பனை மரங்கள்

 பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்... இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.

Saturday 9 May 2015

வெப்பத்தை தணிக்கும் உணவுகள்

வெப்பத்தை தணிக்கும் உணவுகள் !!!

 


 

உடல் வெப்பத்தை தணிக்கும் 12 உணவுகள்


 

பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.


 

தற்போது கோடைகாலம் என்பதால், உடல் வெப்பமானது அளவுக்கு அதிகமாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய வெப்பம் உடலில் வெப்பத்தை மட்டும் அதிகரிக்காமல், வயிற்று வலி, அரிப்புக்கள், பிம்பிள், மயக்கம் மற்றும் சோர்வு போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே இத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு உடலில் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, அதிகமான தண்ணீர் மற்றும் பழங்களால் செய்யப்பட்ட பானங்கள் குடிப்பது என்பனவற்றை பின்பற்ற வேண்டும்.


 

சரி, இப்போது உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, இதனை உணவில் அதிகம் சேர்த்து, உடல் வெப்பத்தை தணிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்.


 

தர்பூசணி


 

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.


 

முலாம் பழம்


 

உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்த பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதனை ஒர நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.


 

வெள்ளரிக்காய்


 

கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியை குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.


 

புதினா


 

இயற்கை வைத்தியத்தில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு புதினா பெரிதும் உதவியாக உள்ளது. எனவே அதிகமான உடல் வெப்பம் உள்ளவர்கள், புதினா ஜூஸ் குடிப்பது நல்ல பலனைத் தரும்.


 

முள்ளங்கி


 

முள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.


 

எள்


 

தினமும் எள் சாப்பிட்டாலும், உடல் வெப்பமானது எளிதில் தணியும். மேலும் உடலில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கும்.


 

சீரகம்


 

சீரகத்தை இரவில் படுக்கும் போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரை காலையில் எழுந்து பருகி வந்தால், உடல் வெப்பம் குறையும்.


 

இளநீர்


 

உடல் வெப்பத்தை தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.


 

மாதுளை


 

மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தாலும், உடல் கூலாக இருக்கும்.


 

கசகசா


 

நாள்தோறும் இரவில் தூங்கும் முன், ஒரு கை கசகசா சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், நல்ல நிம்மதியான தூக்கம் கிடைப்பதோடு, உடல் வெப்பமும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.


 

வெந்தயம்


 

மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியம் என்றால், அது தினமும் வெந்தயத்தை சாப்பிடுவது தான். இதனால் உடல் வெப்பமானது எளிதில் தணியும்.


 

குளிச்சியான பால்


 

குளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.