விவசாயதின் நிலமையை மாற்றுவோம்
நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தின் இன்றைய நிலையை நாம் பார்த்தோமானால் அது திட்டமிட்டே நடத்தப்படும் கொள்ளை ஆகும். இதனை நாம் உணரவேண்டுமானால் நாம் சிறிது காலம் பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும். அதாவது பசுமை புரட்சிக்கு முந்தைய கால கட்டங்கள்.
அந்த காலங்களில் விவசாயிகள் நல்ல நிலையில் இருந்தார்கள் அவன் யாரிடமும் கையேந்தி நிற்க வில்லை அவனே அனைத்து விவசாய நுட்பங்களையும் தெரிந்து வைத்திருந்தான்.
பசுமை புரட்சியின் தாக்கதினால் இன்றைய நிலையை பார்த்தோமானால் ஒவ்வொரு விவசாயியும் கடனாளியாகவே இருக்கிறான் குறைந்த பட்ட்ச்ம் சுமார் 50000 ருபாய் கடன் உள்ளது.
ஏன் என்றால் பார்த்தோமானால் அதற்கு காரணம் பசுமை புரட்சி இது திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட சதி!
பசுமை புரட்சியின் நோக்கமே
வீரிய ஒட்டு ரகங்கள் , இரசாயன உரம், பூச்சி கொல்லிகள் (ஏமன், காலன், தூதன்) இதனை பயன் படுத்த தொடங்கினான். இது ஆரம்பத்தில் நல்ல மகசூலை கொடுத்தது ஆனால் இன்று இதனால் நமது பாரம்பரிய விதைகள்,மண் வளம், சுற்றுசுழல் மிகவும் பாதிக்க பட்டது. இதனால் மனிதனுக்கும், வில்ங்குகளுக்கும் பல விதமான நோய்களுக்கு தள்ளப்பட்டனர். இதிலிருந்து மீள நாம் நமது பாரம்பரிய விவசாய முறைகளை பின்பற்ற வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் அரசாங்க பணியை விரும்புகின்றனர். விவசாயம் செய்வதை இன்றைய இளைஞர்கள் கேவலமான நினைக்கிறார்கள். விவசாயம் செய்ய ஆள்கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இளைஞர்கள் விவசாயத்திற்க்கு வர வேண்டும். வந்தால் மட்டும் போதாது நமது பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டு அதனை பரப்ப வேண்டும்.
நாம் புதிய தொழில் நுட்பங்களை பின்பற்றுவதனால் வேறு துறைகளில் வேண்டுமானால் நாம் முன்னேரலாம். ஆனால் விவசாயம் அப்படி அல்ல!!!
‘’மற்ற துறைகள் நமது வசதிக்காக ஆனால் !!!
விவசாயம் நமது வாழ்க்கைக்காக !!! ‘’
புதிய தொழில் நுட்பங்களை பின்பற்றுவதனால் நமக்கு முதலில் வேண்டுமானால் அது நன்மை பயக்கும். பிறகு தான் அதன் குணம் மெல்ல மெல்ல வெளிப்படும்.
புதிய துடைப்பம் நன்றாக துடைக்கும்!!! என்பார்களே அது போலதான்.
புதிய தொழில் நுட்பங்களை பின்ற அதிக அளவில் பணம் செலவழிக்கிறோம். இதனால் தான் விவசாயி கடனாளியாக்க படுகிறான். இதனை சரி செய்ய வங்கி கடன் , சலுகைகள், இலவசங்கள் என்ற பெயரில் அரசு வழங்கி மேன்மேலும் அவனை குழிக்குள் தள்ளுகிறது. ஏனென்றால்
‘’இலவசங்களும் சலுகைகளும் தான் மக்களை மளுங்கடிக்கிறது!! ‘’
இந்த நிலையை நாம் தான் மாற்ற வேண்டும் !
இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து அழிந்து கொண்டு இருக்கிற நமது பாரம்பரிய முறைகளை மறுபடியும் நிலைநிறுத்த வேண்டும்.
விவசாயத்தில் இன்னொரு பெரிய சிக்கல் சந்தை படுத்துதல்!
ஒரு சாதரண குண்டூசி தயாரிக்கிறவனே அதன் விலையை நிர்ணயம் செய்கிறான்! ஆனால் அன்றாட தேவையான உணவு பொருட்களை உற்பத்தி செய்கிறவன் தான் உற்பத்தி செய்த விளை பொருளை அடி மாட்டு விளைக்கு கொடுத்து விட்டு வருகிறான்!.
தங்கத்தின் விலை ஏற்றத்தை நாம் கண்டு கொள்வதில்லை
ஆனால் விவசாய விளை பொருள்கள் விலை உயர்ந்தால் மட்டும் நாம் அதை எதிர்க்கிறோம்.
ஒரு கிராம் தங்கம் 1750 ரூபாய்க்கு விற்க்கும் போது ஒரு கிலோ வெங்காயம் ஏன் 100 ரூபாய்க்கு விற்கக் கூடாது. இப்படி விற்கும் போது விவசாயிக்கு கிடைப்பது என்னவோ 25 – 30 ரூபாய் மட்டும் தான்.
60 – 80 % கிடைப்பது இடைத்தரகர்களுக்குத் தான். ஒருவரின் உழைப்பில் ஒரு ஊரே சாப்பிடுகிறது. ஆனால் உற்பத்தி செய்தவனோ சாப்பிட வழியின்றித் திண்டாடுகிறான்.
எப்போது விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளுக்கு அவனே விலை நிர்ணயம் செய்கின்றானோ அப்போது தான் விவசாயியும், விவசாயமும் முன்னேறும். இந்த நிலையை நாம் தான் மாற்ற வேண்டும். தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருள்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்! இந்த நிலையை அடையும் கலம் வெகு விரைவில்!!
வாங்க நண்பர்களே இணைவோம் !
’’ஒன்று படுவோம்! உயர்வோம்! உயர்த்துவோம்!’’
சு. ஆனந்தராஜ் BSC விவசாயம்
தமிழ் இயற்கை பண்ணை
செட்டி குளம் , பெம்பலூர் மாவட்டம்
தமிழ் நாடு - இந்தியா
அலை பேசி ; +91 9487269907