Wednesday 27 July 2011

இயற்கை நுண்ணுயிர் உரம் /நுண்ணுரம்

இயற்கை நுண்ணுயிர் உரம் /நுண்ணுரம்


நுண்ணுயிர் உரம் என்பது செயல்திறனுள்ள நுண்ணுயிர்கள் அடங்கிய ஒரு கலவையாகும். இவற்றை மண்ணில் இடும் பொழுதோ, அல்லது விதை நேர்த்திக்குப் பயன்படுத்தும் பொழுதோ, கலவையில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள கனிமங்களோடு (பயிர் ஊட்டச்சத்துக்கள்) வினைபுரிந்து, அவற்றை பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளுமாறு செய்கிறது. நுண்ணுயிர் உரம் மண் வளத்தை பாதுகாக்க முக்கியப் பங்குவகிக்கின்றது. அவை



பஞ்சகவ்யம்





ஜீவாமிர்தம்





தானியக் கரைசல்





திறன் நுண்ணுயிர்





அசோலா





பஞ்சகவ்யம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

பசுஞ்சாணம்-5 கிலோ, பசுவின் கோமியம்-3 லிட்டர், பசும்பால்-2 லிட்டர், பசு தயிர்-2 லிட்டர், பசு நெய்-1 லிட்டர், கரும்புச்சாறு-1 லிட்டர், தென்னை இளநீர்-1 லிட்டர், வாழைப்பழம்-1 கிலோ.







தயாரிப்பு முறை

பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும். 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.



பஞ்சகவ்யம் நன்மைகள் என்ன?



1.பஞ்சகவ்யாவை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.

2.பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்

பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.





3.பயிர்களுக்கு தேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் பஞ்சகவ்யாவில் உள்ளன.

4.பசுமாட்டின் கோமியத்தில் உள்ள யூரிக் அமிலமானது உரம் மற்றும் ஹார்மோன்களாக செயல்படுகின்றன.

5.பஞ்சகவ்யாவில் உள்ள லேக்டோபேசில்லஸ் போன்ற நுண்ணுயிர்கள் அங்கக அமிலங்களையும் நோய் எதிர்ப்பு பொருட்களையும் உற்பத்தி செய்வதோடு பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல் படுகிறது.

6.தென்னை இளநீரானது பயிர்களின் பச்சையத்தை அதிகப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.





ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.

இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

பயன்படுத்தும் முறை

ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.





ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .



ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள்





4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )





15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.





6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )





30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.



ஓர் ஆண்டு பயிர்களுக்கு



30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர்.

240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .

பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.







ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன?

ஜிவாமிர்தம் பாய்சசப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .

ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.

ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.







ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா?

ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.





தானியக் கரைசல் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்





உளுந்து -100 கிராம்

பச்சைப் பயறு -100 கிராம்

காராமணி -100 கிராம்

கொண்டைக்கடலை -100 கிராம்

கொள்ளு -100 கிராம்

எள்-100 கிராம்-100 கிராம்

கேழ்வரகு அல்லது கோதுமை -100 கிராம்







தயாரிப்பு முறை



முதல் நாள் எள்ளை மட்டும் தனியாக ஊறவைத்து .துணியில் கட்டி முளைக்கட்ட வைக்க வேண்டும் .மறுநாள் மீதி அனைத்துத் தானியங்களையும் ஒன்றாகக் கலந்து முளைக்கட்ட வைக்க வேண்டும் முளைக்கட்டிய பிறகு ,அனைத்தயும் விழுதாக அரைத்து 10 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் கலந்து ,200 லிட்டர் தண்ணீர் சேர்த்து , ஜீவாமிர்தத்தைக் கலக்குவது போல் கலக்கி விட வேண்டும்.இதை 24 மணி நேரம் கழித்து பயன்படுத்தலாம்.



திறன் நுண்ணுயிர் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

10-க்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளின் வேர் பகுதி மண் அரை கிலோ, பரங்கிப் பழம் 2 கிலோ, பப்பாளிப் பழம் 2 கிலோ, சாராய வெல்லம் 1 கிலோ, குடிநீர் தேவையான அளவு, நாட்டுக்கோழி முட்டை 2 அல்லது 3, வாய் அகன்ற பிளாஸ்டிக் பாத்திரம் 20-30 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

தயாரிப்பு முறை

நன்கு செழிப்பான, நோய் தாக்கமில்லாத 10 வகையான மரம், செடி, கொடி வகைகளின் வேர்ப்பகுதியிலிருந்து வேர் மற்றும் மண்ணை சேகரித்துக்கொள்ள வேண்டும். 1 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து 500 கிராம் வீதம் 10 மரம், செடி, கொடி வகைகளிலிருந்து மண்ணை சேகரிக்கலாம். இதனை பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்து கொண்டு, பரங்கியும், பப்பாளிப்பழம் மற்றும் சாராய வெல்லம் ஆகியவற்றை பிசைந்து போடவேண்டும். பிறகு நல்லநீரை மண், பப்பாளி, பரங்கி, வெல்லம் ஆகியவை மூழ்கும் வரை ஊற்றவேண்டும். பிறகு முழு நாட்டுக்கோழி முட்டையை அதனுள் போடவேண்டும். பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு மூடி, நிழலில் வைக்க வேண்டும். காற்றோட்டத்துக்காக காலையிலும், மாலையிலும் பிளாஸ்டிக் பாத்திரத்தை திறந்து மூடவேண்டும். 30 நாள்களுக்குப் பிறகு திறன் நுண்ணுயிரி கலைவையை பயன்படுத்தலாம். 6 மாதம் வரை இக்கலவையை பயன்படுத்தலாம்.





திறன் நுண்ணுயிர் எப்படி பயன்படுத்துவது?

பயன்படுத்தும் முறை

பாதிக்கப்பட்ட தென்னையின் அடிப்பாகத்தில் மூடாக்கு எனப்படும் முறையை பயன்படுத்தி (தென்னை ஓலை அல்லது மட்டையால் வேர் பகுதியை மூடுதல்) அதன்மேல் நுண்ணுயிரி கலவையை ஊற்ற வேண்டும். (30 லிட்டர் நீருடன் 1 லிட்டர் திறன் நுண்ணுயிரி கலந்து தெளிக்கலாம்). இக்கலவையை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இதனால் இடுபொருள் செலவு குறைவு, ஈரப்பதத்தை கட்டுப்படுத்துதல், குறைவான கூலி, காய்களின் நிறம், வடிவம், அளவு மற்றும் சுவை அதிகரிப்பு. பஞ்சகவ்யம் மற்றும் திறன் நுண்ணுயிரி கலவை வாடல் நோயால் மரம் பாதிக்காத வகையில் காக்கும் என்றார்.

0 கருத்துரைகள்: