Monday 8 July 2013

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி வழிமுறைகள்


      இயற்கை முறையில் காய்கறி சாகுபடி வழிமுறைகள்

1.     நாம் தேர்வு செய்யக்கூடிய நிலத்தில் மண் வளம் மற்றும் தண்ணீர் தேவையை அறிய வேண்டும்.
2.    காய்கறி பயிர்களின் வளரும் தன்மை வேறுபடுவதால் நாம் முதலில் நமது நிலத்துக்கு தேவையான சரியான பயிரினை தேர்வு செய்ய வேண்டும்.
3.    காய்கறி பயிர்களில் நிறம், ருசி முதலியன வட்டாரத்திற்கு வட்டாரம் வேறு படுவதால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
4.     காய்கறி பயிர்களை நஞ்சை – புஞ்சை –தரிசு நிலங்களில் சாகுபடி செய்யலாம்.
5.    நாம் ஒரே நிலத்தில் ஒரே பருவத்தில் ஒரே பயிரை பயிரிடாமல் பலவகையான காய்கறிகளை பயிரிட வேண்டும் குறிப்பாக, வெள்ளரி, பூசணி,  வெங்காயம், பாகல், புடலை, கொத்தமல்லி,கத்தரி, சேனைக்கிழங்கு, போன்ற பல்வேறு காய்கறிகளை பயிரிட வேண்டும்.
6.    பலதரப்பட்ட காய்கறிகளுடன் மஞ்சள், இஞ்சி, காட்டு இஞ்சி போன்ற நறுமண பயிர்களையும் பயிரிட வேண்டும்.
7.    பட்டம் பருவத்தை அனுசரித்துப் பாரம்பரிய முறைப்படி காய்கறி சாகுபடி செய்ய வேண்டும்.
8.    உணவுக்கு அரிசியே முதன்மை, ஆகவே நெல் சாகுபடி முன்னுரிமை பெறுகிறது. சாம்பார்- ரசம் தேவைக்குப் பருப்பு சாகுபடி இரண்டாவது முக்கியதுவமும்,  காய்கறி மூன்றாவது முக்கியத்துவமும், நான்காவதாக பசுப்நெய்,  வெண்ணைய், பால் முக்கியதுவம் பெறுகிறது.
9.    அரிசி, பருப்பு, நெய்,  காய்கறி கலந்த உணவே முழுமையான உணவு. தெய்வத்திற்குப் படைக்கத் தக்கது. மனிதனுக்கு ஆயுள் விருத்தி போதுமான ஊட்டம் வழங்கி உடல்நலமும் பாதுகாக்கப்படுகிறது.
10.  பிரம்மதேவன் இந்த உலகைப் படைக்கும்போது மனிதகுலம் தழைக்க மேற்படி உணவுப் பயிர்களையும் திட்டமிட்டுப் பல்லுயிர்களையும் காப்பாற்றினான்.
11.  இவ்வாறு நல்லுணவைப் படைத்த பிரம்மதேவனின் நோக்கம் எதுவெனில் மக்கள் யாவரும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு படிகளையும் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்தலே மனிதர்கள் ஆண்டவனுக்கு வழங்கும் நன்றிக்கடன்.
12.  ஆகவே, சிறிது நீர் வசதி இருப்பினும் எந்த மண்ணுயும் தரிசாக விடாமல் கிடைக்குமிடம் எதுவாயினும் அவ்விடங்களில் காய்கறி சாகுபடி செய்யவேண்டும். கிராம-நகரங்களில் ஒட்டுப்பகுதிகள், வீட்டின் பின்புறம், காடு – மலைப்பகுதிகள் என்று எங்கு நோக்கினும் விட்டகுறை – தொட்டகுறை இல்லாது காய்கறிகளைச் சாகுபடி செய்க.
13.  வசந்தகாலம், கோடைக்காலம், குளிர்காலம் என்று மூன்று பருவங்களிலும் தக்கபடி பயிரிடலாம்.
14.  நன்கு புழுதிபட உழப்பட்ட நிலங்களில் காய்கறி விதைகளை நடவேண்டும்.
15.  பழமாயுள்ள கத்தரி விதைகளைப் பிரித்து வெயிலில் காயவைத்துப் பின்னர் விதைக்கவெண்டும். அப்போதுதான் முளைப்புதிறன்கிட்டும். விதைத்துப் பின் மற்றோன்று நட்டப்பின் உரமிடுதல் இதனினும் நன்று. புழுதிபட உழுது உரமிட்ட மண்ணில் விளையாதது எதுவுமில்லை. போட்ட விதை முளைக்க நன்றாகத் தண்ணீர் தெளித்து வைக்கோல் முடாக்கும் போட வேண்டும். வேரில் ஈரம் காயாமல் கவனிக்க வேண்டும். பின்னர் எந்தப் பயிரும் முளைவிடும்.
குறிப்பு  ;  இயற்கை  விவசாயத்தில்  மூடாக்குப் போடுவது பற்றிய குறிப்பை கவனிக்கவும்.
16.  மேற்படி முறையில் நாற்றுப் பாவும்போது மூன்று நாளில் சரியான இடங்களில் விதை முளைக்கட்டும்.
17.  இப்படி விதைத்து முளைத்த நாற்றுக்களை இருபது நாட்களுக்குள் பக்குவமாக வேருடன் எடுத்து நன்கு புழுதிபட உழுது தயாரிக்கப்பட்ட நிலத்தில் நட்டு வேரில் நீர்ப்பாய்ச்சுவது அவசியம்.
18.  கத்தரி போன்ற பயிர்களை வரிசையாகப் பார்போட்டு  நடவேண்டும். அப்போது வேருக்கு நிறைய நீர் கிடைக்கும்.
19.  வெள்ளரி, கீரணி போன்ற படரும் கொடிப்பயிர்களை உரமிட்ட குழியில் விதைக்கவேண்டும். களை முளைக்காத வண்ணம் வைக்கோல்களைப் பரப்பி அதன்மீது படரவிடவேண்டும்.
20.  அனுபவ விவசாயி மேற்படி காய்கறிகளைக் கோடைக் காலத்திலும் கூட நஞ்சை நிலத்திலும் நட்டுப் பயன்பெறுவார்.
21.  சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு மஞ்சள் போன்ற பயிர்களையும் ந்ஞ்சையில் – பள்ளக்காலில் சாகுபடி செய்யலாம்.
22.  சூரிய ஒளி படும் காய்ச்சல் நிலங்களில் விவசாயம் வெற்றி தரும். பலதரப்பட்ட காய்கறிப் பயிர்களைக் காய்ந்த நிலங்களில் சாகுப்படி செய்யலாம்.
23.  மேட்டுநிலங்களில் சாம்பல்பூசணி, ஏலக்காய், லவங்கப்பட்டை, வெற்றிலை ஆகியவற்றை முறைப்படி சாகுப்படி செய்யலாம்.
24.  வெற்றிலையைப் பள்ளக்காலிலும் சாகுபடி செய்யலாம். வெற்றிலையுடன் கரும்பு, வாழை, பாக்கு எல்லாம் வளரும். அரண்மனை அந்தப்புற வனங்களிலும் நந்தவனங்களிலும் வெற்றிலையைப் பயிரிடலாம்.
25.  வாழையைப் போல் சுவையுள்ள பலா, மா சாகுப்படியையும் செய்யவேண்டும். இம்முக்கனி தவிர நாகப்பழமும் உகந்தது.
26.  விவசாயம் தெரிந்தவர்கள் தென்னை நடுவதை விடமாட்டர்கள்.
27.   ( 12 இல் உள்ளப்படி)
28.  பிராமண – க்ஷத்திரிய – வைசிய – சூத்திரர் அடங்கிய நால்வகை வர்ண்த்தாரும், படைவீரர்களும், வேட்டுவர்களும், என்ன தொழில் செய்தாலும் கூடவே விவசாயத்திலும் ஈடுபட்டுக் காய்கள்-பழம்-பூக்களை சாகுபடி செய்ய எந்தத் தடையும் இல்லை.
29.  கொத்தமல்லித்தழை, விதை, சாம்பல்பூசணி, ஜாதிக்காய், சேனைக்கிழங்கு போன்ற சாகுபடியில் இறங்கும்போது சாஸ்திரநெற்ப்படி பயிர் செய்யவேண்டும்.
30.  முதலில் நிலத்தை உழவோட்டவேண்டும். ஏரினும் நன்றாம் மண்வளத்தைத் தொழுஉரம் இடவேண்டும். மண்வளத்தைத் தொழுஉரம் பாதுகாக்கும்.
31.  பயிரிட்ட நிலத்தில் நீர்ப்பாய்சாக வாய்க்கல் அமைத்துப் பார்போட்ட பாத்திகளில் கத்தரி நடவேண்டும்.
32.  மல்லிகை, முல்லை, சம்பகம், வெப்பாலை போன்ற பயிர்கள், காடுகள், மரங்கள், ஆகியவற்றை உகந்தவாறு திட்டமிட்டுச் சாகுபடி செய்ய வேண்டும்.
33.  பாத்திக்கட்டிப் பார்போட்ட பின் நாற்று நட வேண்டும். மேட்டுப்பாத்திகளில் விதைப்பது நன்று. வேர்பகுதி காயாமல் கவனிப்பது அவசியம்.
34.  நட்ட காய்கறிப்பயிர்களில் மாதம் ஒன்று முடிந்த பின்பு மண்டும் கள்களைக் கட்டாயம் நீக்குவது அவசியம்.
35.  போதுமான அளவில் வேர் நனையலில்லையென்றால் வாய்க்காலில் ஓடும் நீரை அள்ளித் தெளித்துப் பயிர்களைக் காப்பாற்றுவது நன்று.
36.  பயிர் நட்ட நாளில் இருந்து ஈரம் காயாமல் பயிரைக் காப்பாற்ற வேண்டும். கோடைகாலத்தில் மண் காய்ச்சல்  கொடுக்கும் போது அடிக்கடி வேர் காயாமல் நீர் தெளிக்க வேண்டும்.
37.  களை எடுக்காத பயிர் வீண். பயிரில் பலன் காணக் களை எடுக்க வேண்டும்.
38.  களை எடுத்த பின் அடுத்த கட்டம் பூச்சி தாக்குதல். களை எடுத்து நீர்  விட்டபோது பூச்சிகள் மறையும். அப்படியும் மறையாவிட்டால் தெளித்த சுண்ணாம்பு நீரைத் தெளிக்கலாம். படரும் பயிர்களில் சலித்த சாம்பலைத் தூவுக. வட்டாரந் தோறும் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய உத்திகளைக் கையாண்டு பூச்சிகளை விரட்டிப் பயிர்களைக் காப்பாற்றவேண்டும்.
39.  விதைத்தல், நாற்று நடுதல், களை எடுத்தல், பயிர்வளர்த்தல், படரும் கொடி பயிரிடுதல், மல்ர் சாகுபடி, ஆகிய பணிகளை கவனமுடன் செய்து வளர்ச்சியை தினமும் கவனித்து வரவேண்டும். பாரம்பரிய உழவியல் நுட்பங்களை உகந்த முறையில் கடைப்பிடுத்துப் பயிர்களை திடமாக வளர்க்கவேண்டும்.
40.  வெள்ளரி, கத்தரி, சாம்பல் பூசணி, எலுமிச்சை, ஏலம், திராட்சை எதுவாயினும் மேற்படி சாகுப்படியைத் தொடங்கும்போது அந்தந்த வட்டார மரபுப்படியான நுட்பங்களையும், பருவம் பட்டங்களையும் அனுசரித்துப் பயிர்வளர்ந்து பலன் பெறும்போது உண்ணுவதில் ஆனந்தம். சுவைக்கும் ருசியிலும் ஆனந்தமே.
41.  உணவுப் பயிர்களில் சில பாகங்களில் கீரையாக இலைகளில் ருசி இருக்கும். சில தாவரங்களில் காயாகவும் கனியாகவும் பறித்து உண்ணுவதிலும் சமைப்பதிலும் ருசி இருக்கும். சில தாவரங்களில் கிழங்காக வெட்டி எடுத்து உண்பதில் ருசி உண்டு.
42.  சிலவற்றின் வேரின் தொடக்கத்தில் ருசி உண்டு. சிலவற்றில் நடுப்பகுதி ருசியாயிருக்கும். சிலவற்றில் பூக்கும் முனைப்பகுதியில் ருசி இருக்கும். சிலவற்றில் சாறாக அருந்தினால்  ருசி இருக்கும்.
43.  வாழை மிகவும் சிறப்பான உண்வுப் பயிர். வாழைப்பழமாக உண்ணலாம். காயைச் சமைத்து உண்ணலாம். சாரெடுத்துச் சுவையூட்டிக் குடிக்கலாம்.
44.  சில காய்களை முற்றிவிடாமல் பிஞ்சாகப் பறித்துச் சமைப்பது ருசி. கத்தரிகாயையும் வெள்ளரியையும் முற்றிவிடாமல் பிஞ்சாக உண்ணவேண்டும்.
45.  மாம்பழம், பலாப்பழம், ஆகியவற்றை முற்றிலும் பற்றிய நிலையில் காயாகப் பறிக்கவேண்டும். சாம்பல் பூசணியைப் பிஞ்சாகவும் பறிக்கலாம். முற்றிய காயாகவும் பறிக்கலாம். இரண்டுமே ருசியானவை.

தொடர்புக்கு ;
நம்மண் இயற்கை பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர்- திருநெல்வேலி
அலைபேசி ;+91 9787305169,+91 8124242431
மின் அஞ்சல் ; nammann@gmail.com, organicananth@gmail.com,
வலைதளம்; www.organicananth.blogspot.com



0 கருத்துரைகள்: