நம்மண் (மண்ணின் மைந்தர்கள்) - இயற்கை விவசாய பண்ணை தொடக்க விழா
ஆனி மாதம் 26 தேதி (ஜீலை 10) புதன் கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அமைந்துள்ள
P.K.R. இயற்கை பண்ணையில் நம்மண் அமைப்பின் தொடக்க விழா நடந்தது
இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிஞர் ;திரு நம்மாழ்வார் அவர்கள், பங்குகொண்டு நம்மண்
நிறுவனத்தினை தொடங்கி வைத்தார்
நிறுவனத்தின் குறிக்கோள்
இயற்கை
மீது தீவிர ஆர்வம் கொண்ட இளைஞர்களை தேர்வு செய்து இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள செய்வதுடன்
பண்ணையாளர்களின் உற்பத்தியை பெருக்கி அதன்
மூலம் இருசாரரும் பயனடைய செய்வதே இதன் முக்கிய
நோக்கமாகும்.
இன்றைய
இளைஞர்கள் விவசாயத்தை தவிர்த்து அனைத்து துறைகளிலும் முன்னேறுகின்றனர். ஆனால் உணவளிக்கும்
பூமி தாயை மறந்து பல உடல் உபாதைகளுக்கு உட்பட்டு மருத்துவமனையில் தஞ்சம் புகுவோரின்
எண்ணிக்கை இன்றளவில் அதிகம் என்பதை நம் கண்கூடாக காண்கின்றோம்.அதனை தவிர்த்து நமது
முக்கிய குறிக்கோளான உணவே மருந்து என்ற கொள்கையை
இளைஞர்களிடையே பரப்பி நோய் இல்லா உலகை படைப்போம் என சபதம் ஏற்போம்.
’’தனியொரு
மனிதனுக்கு உணவு இல்லை யேல் உலகத்தினை அழித்திடுவோம்’’ - என்றான் மகாகவி
இன்று
உணவு உற்பத்தியை தவிர மற்ற துறைகளில் ஏறத்தாழ தன்னிறைவு அடைய செயல் பட்டு வருகிறது அரசு.
இதனை
உடைத்து அனைவருக்கும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு செய்வதோடு நோயில்லா உலகை படைப்பதே
நம் நோக்கமாகும்.
இயற்கை
மீது ஆர்வம் கொண்ட அனைத்து பண்ணையாளர்களையும் ஒருக்கிணைத்து ஆரோக்கிய உலகை படைப்போம்!!!அனைவரும்
வாரீர்!! ஒன்றிணைவோம்!! புதிய உலகம் படைப்போம்!!!!
நிறுவனத்தின் வரைபடம்
நம்மாழ்வார் அவர்களின்
உதவியாளர் சுமதி அவர்களுடன் முருகேசு - நம்மண்
நம்மாழ்வார் அவர்களின்
உதவியாளர் சுமதி அவர்களுடன் பாஸ்கர்- நம்மண்
நம்மாழ்வார் ஐயாவுடன் விழாவிற்கு வந்த விவசாயிகள்
ஆலோசனை
விழாவிற்கு வந்த
ஆனந்தராசு அம்மா- அப்பா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்த காட்சி
பேராசிரியர்;திரு
; சிவகுமார் (P.K.R. இயற்கை பண்ணை .உரிமையாளர்)
இயற்கை பொருள்களை
சந்தபடுத்தி வரும் ஷாஜன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
பண்ணையை சுற்றி
பார்வையிடுதல்
ஐயா அவர்களுடன்
மதிய உணவு (வரகு சோறு, கவுனி பாயசம், பருப்பு குழம்புடன்)
ஐயாவுடன் நம்மண் செயல் வீரர்கள் (வேல்ராஜ், பிரவீன்,முருகன், பாஸ்கர்)
விழாவிற்கு வந்த
தமிழர் குமுக பொருளாதார மேம்பாட்டு கழக செயலாளர் தமிழ் வாசகன் அவர்களுடன்
நம்மண் செயல் வீரர்கள் ( ஆனந்தராசு, முருகேசு, மகேசுவரன்,சரத்,வேல்ராசு)
நன்றி
நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
திருநெல்வேலி,
தமிழ்நாடு
அலைபேசி;
+91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல்
;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com
0 கருத்துரைகள்:
Post a Comment