Sunday, 14 July 2013

நம்மண் அமைப்பின் தொடக்க விழா
 

நம்மண் (மண்ணின் மைந்தர்கள்) - இயற்கை விவசாய பண்ணை தொடக்க விழா


ஆனி மாதம் 26 தேதி (ஜீலை 10) புதன் கிழமை  அன்று திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அமைந்துள்ள P.K.R. இயற்கை பண்ணையில் நம்மண் அமைப்பின் தொடக்க விழா  நடந்தது   இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிஞர் ;திரு நம்மாழ்வார் அவர்கள், பங்குகொண்டு நம்மண் நிறுவனத்தினை தொடங்கி வைத்தார் 

 நிறுவனத்தின் குறிக்கோள்


இயற்கை மீது தீவிர ஆர்வம் கொண்ட இளைஞர்களை தேர்வு செய்து இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள செய்வதுடன் பண்ணையாளர்களின் உற்பத்தியை பெருக்கி  அதன் மூலம்  இருசாரரும் பயனடைய செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இன்றைய இளைஞர்கள் விவசாயத்தை தவிர்த்து அனைத்து துறைகளிலும் முன்னேறுகின்றனர். ஆனால் உணவளிக்கும் பூமி தாயை மறந்து பல உடல் உபாதைகளுக்கு உட்பட்டு மருத்துவமனையில் தஞ்சம் புகுவோரின் எண்ணிக்கை இன்றளவில் அதிகம் என்பதை நம் கண்கூடாக காண்கின்றோம்.அதனை தவிர்த்து நமது முக்கிய குறிக்கோளான உணவே மருந்து  என்ற கொள்கையை இளைஞர்களிடையே பரப்பி நோய் இல்லா உலகை படைப்போம் என சபதம் ஏற்போம்.
’’தனியொரு மனிதனுக்கு உணவு இல்லை யேல் உலகத்தினை அழித்திடுவோம்’’ - என்றான் மகாகவி

இன்று உணவு உற்பத்தியை தவிர மற்ற துறைகளில் ஏறத்தாழ தன்னிறைவு அடைய  செயல் பட்டு வருகிறது அரசு.
இதனை உடைத்து அனைவருக்கும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு செய்வதோடு நோயில்லா உலகை படைப்பதே நம் நோக்கமாகும்.

இயற்கை மீது ஆர்வம் கொண்ட அனைத்து பண்ணையாளர்களையும் ஒருக்கிணைத்து ஆரோக்கிய உலகை படைப்போம்!!!அனைவரும் வாரீர்!! ஒன்றிணைவோம்!! புதிய உலகம் படைப்போம்!!!!


நிறுவனத்தின் வரைபடம் 


நம்மாழ்வார் அவர்களின் உதவியாளர் சுமதி அவர்களுடன்  முருகேசு - நம்மண்

நம்மாழ்வார் அவர்களின் உதவியாளர் சுமதி அவர்களுடன்  பாஸ்கர்- நம்மண் 
 நம்மாழ்வார் ஐயாவுடன் விழாவிற்கு வந்த விவசாயிகள் ஆலோசனை


விழாவிற்கு வந்த ஆனந்தராசு அம்மா- அப்பா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்த காட்சி 


 பேராசிரியர்;திரு ; சிவகுமார் (P.K.R. இயற்கை பண்ணை .உரிமையாளர்)


 இயற்கை பொருள்களை சந்தபடுத்தி வரும் ஷாஜன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்


பண்ணையை சுற்றி பார்வையிடுதல் 

ஐயா அவர்களுடன் மதிய உணவு (வரகு சோறு, கவுனி பாயசம், பருப்பு குழம்புடன்)

 ஐயாவுடன் நம்மண் செயல் வீரர்கள்  (வேல்ராஜ், பிரவீன்,முருகன், பாஸ்கர்) 


விழாவிற்கு வந்த தமிழர் குமுக பொருளாதார மேம்பாட்டு கழக செயலாளர் தமிழ் வாசகன் அவர்களுடன்

நம்மண் செயல் வீரர்கள் ( ஆனந்தராசு, முருகேசு, மகேசுவரன்,சரத்,வேல்ராசு)


நன்றி 
 நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
  திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி; +91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல் ;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com

Monday, 8 July 2013

வேளாளர்


வேளாளர்
காலமாற்றம்
இலக்கிய உலகில் இறைவனைப் போற்றியவர்கள், கால ஓட்டத்தில் முடிமன்னரைப் பாடினார்கள். இறைக்காப்பியங்கள் மன்னர் காப்பியங்களாக மாறியது. பின்னர் மக்கள் காப்பியங்கள் தோன்றின. மக்கள் காப்பியத்தின் மணிமுடி சிலப்பதிகாரம். அதுவும் வணிக மக்களைச் சார்ந்தது. அறவோர், ஆளுவோர், வணிகர், உழவர் என்ற பார்வையில் உழவர் காப்பியங்கள் தோன்றவில்லை. உழவர் படைப்பு மிகவும் பிற்காலத்தில் தோன்றியது. முக்கூடற்பள்ளு என்ற பெயரில் உழவரை இழிவுப்படுத்தும் பாங்கில் தோன்றின. சிலப்பதிகாரக் காலத்திற்கும் முக்கூடற்பள்ளு காலத்திற்கும் இடையில் உழவர் சிறப்பை பாடல்களில் படைத்துள்ளார்கள். மருதநில உழவர்கள் தான் தன் உற்ப்பத்தி திறன் மேன்மையால் வேளாளர். வேளிர், மன்னர், மாமன்னர் என வளர்ந்து, ஆரியத்திற்கு ஆட்பட்டு, கால கால ஓட்டத்திற்கு ஏற்ற உற்பத்தி முறையை ஏற்காமல் அயல் நாட்டு உற்பத்தி முறையைப் பின்பற்றி, ஆண்டயினம், அடிமையானது.
கம்பன் காலம்
கம்பன் காலத்தில் இறைவன்  மன்னர்களாக பிறவி எடுத்து மக்களைக் காப்பாற்றும் கருத்துடையக் காலம். இது இறைவனுக்கும் மன்னனுக்கும் ஏற்ப்பட்ட சமரசக் கொள்ளைப் போன்றது. காணத கடவுளுக்கு அஞ்சுவதும் காணும் மக்களுக்கு அஞ்சுவதும் மக்களின் இயல்பான சூழ்நிலையில், காப்பிய படைப்பாளர்கள் உள்ளத்தில் தோன்றும் சமரசக் கொள்கையால் இறைவன் மன்னராகப் பிறவி எடுத்து மக்களைக் காப்பாற்றும் படைப்புகள் தோன்றும். அந்த அடிப்படையில் தான் வால்மீகி இராமாயணத்தைக் கொண்டு கம்பன் இராமாயணம் படைத்தார். அவர் படைப்பு ஒரு வகைத் தனித் தன்மையுடையதால் அதைக் கம்ப இராமாயணம் என்றே அழைத்தார்கள். காணக்கடவுள், காணும் மன்னர் இருவருக்கும் அடிப்படையாய், ஆணிவேராய், மூலமாய், முதல்வராய் இருப்பவன் உழவன் என்பதை கம்பர் உணர்கிறார். உணர்ந்ததை உரைப்பவன் தான் உண்மையான படைப்பாளன். உலகு உய்ய இறைவன் பிறவி எடுப்பார் என்ற கருத்துக்கு மேலாக ‘’ உலகு உய்யப் பிறந்தோரே உழவன்’’ என்று முழங்குகிறார். இது உண்மை. மற்றவை கற்பனை.
கம்பன் காலத்தில் குலம்
தமிழர்கள் மனிதனை பண்பின் அடிப்படையில் நான்கு குலமாக பார்த்தார்கள். அறவோர் குலம், ஆள்வோர் குலம், வணிகர் குலம், வேளாளர் குலம் என்பன. அறம், ஆளுமை, நேர்மை, உழைப்பு இந்த நான்கும் ஒவ்வொரு மனிதனின் பண்புகள். எந்த பண்பு மேலோங்கியிருக்கிறதோ, அவர்களின் குழுவை அக்குலமாகப் பார்த்தார்கள் ஆனால் ஆரியம் அந்தணர் குலம், அரசர் குலம், வைசியர் குலம், சூத்திரம் குலம் என்று திரித்தார்கள். அது கம்பன் காலத்தில் தொழுங்குலம், எழுங்குலம், செழுங்குலம், உழவர்குலம் என்ற நிலையில் கம்பர் கண்டார். தொழுங்குலம் அந்தணர் அதாவது ஆரியர், எழுங்குலம் ஆளும் மன்னர்கள், செழுங்குலம் வணிகர் குலம், உழவர் குலம் வேளாளர் குலம், ஆரிய பார்வையில் சூத்திர குலம். இது கம்பனுக்கு உடன்பாடில்லை. உழவர் குலம் தான் உயர் குலம், உலகிற்கு உணவளிக்கும் குலம். மன்னனை ஆண்ட குலம், அறத்திற்கு வழி வகுத்தது. அறவாழ்வு வாழ்ந்தகுலம், உற்பத்தி செய்து, உற்பத்தியை  பகுத்து, பகிர்ந்து கொண்டு நேர்மையின் சின்னமாய் வாழ்ந்தவர்கள். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உயர்ந்த குலத்தவர் உழவர் குலத்தவர் என்று கம்பர் உணர்ந்தவர். காலமாற்றம் கருத்துமாற்றம் என்றாலும் கம்பன் உள்ளம் மாறவில்லை. சமுதாயத்தில் உள்ள நிலையை காண்கிறார். உண்மை நிலையை உணர்கிறார். உள்ளதைப் பாடுகிறார். படைக்கிறார். அப்படி படைத்தது தன் ‘’ஏர் எழுபது’’ மன்னன் போர் கருவியான ஈட்டியைப் பார்த்து மன்னன் மகிழ ஒட்டகூத்தன் பாடியது ‘’ஈட்டி எழுபது’’ கம்பன் உள்ளத்தில் பட்ட உழவன் சிறப்பை வெளிப்படுத்த பாடியது தான் ‘’ஏர் எழுபது’’ ஏர் எழுபது உழவுத் தொழில் மேம்பட்ட, மருத நில மக்களின் மாண்பையும் உயர்வையும் உலகிற்கு அறிவிக்க வந்த உழவர் காப்பு காவியம். முக்கூடற் பள்ளுக்கு முற்றுப் புள்ளி வைக்க பாடிய படைப்பு.
கம்பன் கண்ட வேளாளர்
உண்டிக் கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பது சான்றோர் வாக்கு. உண்டியை உற்பத்தி செய்தவர்களில் முதன்மையானவர்கள் மருத நில மக்கள் ஆவார்கள். நெல்லை விதைத்த விற்பனர்கள். உழுதல்,களை எடுத்தல், எருவிடுதல், நீர்பாச்சுதல், காப்பு பயிர் செய்தல், உற்பத்தியை பகிர்தல், பகுத்துண்டு வாழ்தல், பிறர்க்கென வாழ்தல், பிறரை  ஆளுதல், பிறருக்க வழிகாட்டுதல், பிறரைக் காப்பாற்றுதல், போன்ற பல்வேறு திறன்களைப் பெற்றவர்கள் மருதநில மக்கள். மன்னர்கள், அவர்கள் ஆரியப் பாரவையில் சூத்திரர் ஆனார்கள். கம்பன் நெஞ்சம் தாங்கிக் கொள்ளவில்லை. கம்பன் உரத்தக் குரலில் தன் கருத்தை ‘’ஏர் எழுபது’’ பாயிரத்தில் பதிகிறார். இந்தப் புரிதலும், உணர்வும் இன்னும் மருதநில மக்களுக்கே வரவில்லை என்பது தான் வேதனையான நிலை. கம்பன் கண்ட மருத நில வேளாளரைப் பாருங்கள்

‘’ தொழும் குலத்தில் பிறந்தான் ஏன்?
    சுடர் முடிமன் னவர் ஆகி
எழும் குலத்தில் பிறந்தால் ஏன்?
   இவர்க்குப்பின் வணிகர்எனும்
செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்?
  சிறப்புடையர் ஆனால்ஏன்?
உழும்குலத்தில் பிறந்தாரே
   உலகு உய்யப் பிறந்தாரே  …….. (8 பாயிரம்)
ஒரு மானுட இயல்பு தோன்றுகிறது. அது இயல்பு. அந்த தோற்றம் ஆர்யத்தால் ஏற்ப்படுத்திக் கொண்ட ஏற்பாட்டால் உயர்வு. தாழ்வு என்று கொள்ளப்பட்டது. தொழுங்குலம், அந்தணர் குலம், எழும்குலம், மன்னர்குலம், செழுங்குலம், வணிகர் குலம், இங்கு பிறந்தால் இறப்பு என்ற கருத்துடைய காலம். கருத்தை மறுக்கிறார். மாற்றுகிறார். உழும் குலமான சூத்திரர் குலத்தில் பிறப்பதை  தான் உயர்வு என்று பறைசாற்றுகிறார். உழும் குலந்தான் உற்பத்தி செய்கிறது. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உற்பத்தியை, உணவை தருகிறனர். மற்ற குலத்திற்கும் உணவளிக்கும் உயர்ந்த குலம் என்று பதித்தார். படித்தவர் எத்தனை பேர். பரப்பியவர்கள் எத்தனை பேர். ஆரியத்தை எதிர்த்தவர்கள் எத்தனை பேர்.ஆரியம் மருத நில மக்களை ஆட்சியாள மற்றவர்களுக்கு பயன்பட்டதால் அக்கருத்தை ஆதரிக்கவில்லை. மருதநில மக்களாகிய உழவர்கள் இந்த உண்மையை உணர வேண்டும். தற்போது அறவோர் ஆரியர், ஆளுவோர் தமிழர் அல்லாதோர். வணிகர் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர். ஆகவே, இன்னும் கம்பர் தேவைபடுகிறார்.
உழும் குலமே ஆண்ட குலம் ஆளபோகும் குலம்
உழும் குலம் தான் தன் உயர்வால் மண்ணை ஆண்டது. சங்ககாலம் காட்டுகிறது. ஆரிய மாயையால் அனைத்தும் மாறியது. மருதநில மன்னர் குலம். தீண்ட தகாத மக்களாய், மருதநில தொழில் பாவத்தொழிலாய் போன காலத்தை மாற்ற, கம்பன் வழி காட்டியுள்ளார். உழும் குலத்தில் பிறந்தாரே, உலகு உய்யப்பிறந்தேரே! உலகு உய்யமட்டுல்ல, உலகை ஆளப்பிறந்தவர்களும் உழைப்பவர்களே தமிழ் மண்ணை ஆளப் போவதும் உழும் குலமே. உலகு குலத்தின் மருதநில மன்னர்களே. நீங்கள் மன்னர் ஆவது எந்நாள்? ஏர் எழுபதால் ஏராளர் எழ வேண்டும். பார் ஆள வேண்டும். அது தான் தமிழ் உழவர் ஆட்சி !!!!!  
 
நன்றி 
 நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி; +91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல் ;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com


வளமான சாகுபடி முறை


வளமான சாகுபடி முறை

ஒரே பயிரைத் தொடர்ந்து பயிர் செய்யாமல் சுழற்சி முறைப்  பயிர் சாகுபடி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது ஒன்றும்  புதிதாக்க் கண்டுப்பிடிக்கப்பட்ட உத்தி அன்று. சங்ககாலம் முதற்கொண்டே உழவர்கள் பயிர்ச்சுழற்சி முறையைப் பின்பற்றி வந்தமைக்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தரமுடியும். பயிற்ச்சுழற்சி முறையை மேற்க்கொள்வதால் நிலம் வள்ம் பெறும். நெல் அறுத்தப் பின்பு வயலில் இருக்கும் கட்டைகளை அன்று அரிகால் என்று கூறி வந்தார்கள். நெல் அறுவடை முடிந்த பின்பு அந்த அரிகால் நஙு மண்ணில் புதையும் படி உழவு செய்து பயறுவகைப் பயிர்களைச் சாகுபடி செய்தார்கள். பயறுவகைப் பயிர்களின் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து இருக்கும். இதனால் நிலம் இழந்த சத்தைப் பெறுகிறது.. இதனால் தான் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூட தமிழக உழவர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன என்று கூறினார்கள்
நன்றி 
 நம்மண் –இயற்கை வேளாண் பண்ணை அமைப்பாளர்கள்
வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு
அலைபேசி; +91 9787305169, +91 8124242431
மின் அஞ்சல் ;nammannorganic@gmail.com, organicananth@gmail.com
வலைதளம்; www.organicananth.blogspot.com