Wednesday, 27 July 2011

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் என்றால் என்ன


பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயிர் வளர்ச்சிக்கும் அதிக அளவு பூ பிடிப்பதற்கும் காய்கனி வளர்சிக்கும் உணவு பொருள் அதிக அளவு உற்பத்தி செய்யவதற்கும் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப் படுகிறது. அவை



மீன் அமிலம்





முட்டை ரசம்





பழக்காடி கரைசல்





தேமோர் கரைசல்





தொல்லுயிர் கரைசல்





லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்





ஆட்டு ஓட்டம்





இயற்கை உர டீ





எலுமிச்சை முட்டைக் கரைசல்





மீன் அமிலம் என்றால் என்ன ?

விவசாயிகள் தங்களது வயல் மற்றும் தோட்டங்களில் அதிகளவில் பச்சையாக இருக்க வேண்டும் என பயிர் மற்றும் செடிகள் நட்டவுடன் நன்றாக வளர்ச்சி காணப்படும் போது தழைச்சத்து உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதனால் பயிர்களின் வளர்ச்சி,​​ குறைந்த கால அளவில் அதிகமாக காணப்பட்டாலும் அதிகளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காரணமாக அதிகளவு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பல சமயங்களில் உற்பத்தி இழப்புகள் ஏற்பட்டு மகசூல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.





மீன் அமிலம் எப்படி தயாரிப்பது?

தயாரிக்கும் முறை:​​

ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,​​ ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும்.​ மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.​ இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.​ பழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.





மீன் அமிலம் எப்படி பயன்படுத்துவது?

பயன்படுத்தும் முறை:

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.​ பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.​ ​தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய்,​​ பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.



மீன் அமிலம் நன்மைகள் என்ன ?

மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.​ ​

​ விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும்.​ ​​ இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ,​​ பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

எனவே விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி,​​ உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.





முட்டை ரசம் எப்படி தயாரிப்பது?

பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.





பழக்காடி கரைசல் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:



சாணம்-20 கிலோ, கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ தொல்லுயிர் கரைசல்-50 கிலோ,

தண்ணீர்-50 லிட்டர், ஜீவாமிர்தம் -5-10 லிட்டர். தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.





இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும்.





தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

புளித்த மோர் - 5 லி இளநீர் - 1 லி இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.

1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.







தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி தயாரிப்பது?

தயாரிக்கும் முறை

50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.

புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.





தொல்லுயிர் கரைசல்(Archae பாக்டீரியா கரைசல்) எப்படி பயன்படுத்துவது?

பயன்படுத்தும் முறை



200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் - 1 ஏக்கர்

10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்





தொல்லுயிர் கரைசல் நன்மைகள் என்ன ?

archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.

இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

0 கருத்துரைகள்: