இயற்கை வழி விவசாய
தொடர்பான ஒப்பந்த அறிக்கை
இயற்கை வழி விவசாயம்
செய்வது தொடர்பாக பண்ணை உரிமையாளருக்கும், நிலத்தை மேம்படுத்துபவருக்கும் இடையேயான
புரிந்துணர்வு ஒப்பந்தம்
நம்மில் 1 வது
பார்ட்டி (பண்ணை உரிமையாளர்) க்கு சொந்தமான இங்கு கீழே குறிப்பிட்டுள்ள பரப்பளவில்
விவசாயம் செய்வது தொடர்பாக 2வது பார்ட்டியிடம் ( நம்மண்- விவசாய பணி செய்வோம்) கலந்து பேசியதில் 1வது பார்ட்டிக்குச் சொந்தமான இடத்தை
எவ்வித இடையூறுமின்றி இயற்கை வழி விவசாயம் செய்து நிலத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன்
2வது பார்ட்டிக்கு கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ள மனப்பூர்வமாக
ஒப்புக் கொள்கிறேன்.இந்த விவசாய பணி ஒப்பந்தமானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவருட காலமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேற்படி 1வது பார்ட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பினால் 2வது பார்ட்டியுடன் கலந்து
பேசி நீட்டித்துக்கொள்ளலாம்.
விவசாயம் செய்ய
உள்ள நிலத்தில் 1வது பார்ட்டின் நிலத்தை மேம்படுத்த ஆகும் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதை வைத்து மொத்த பராமரிப்பு பணியையும், 2வது பார்ட்டி செய்து கொள்ள வேண்டியது
அவசியமான ஒன்றாகும்.
ஒப்பந்தபடி சாகுபடிக்காக
தேர்வு செய்யும் இடத்தை 1வது பார்ட்டியுடன் கலந்து பேசி 2வது பார்ட்டி தேர்ந்தெடுக்கும்
தார்மீக உரிமை உள்ளது. அதன் பின் 2வது பார்ட்டி சாகுபடி தொடர்பாக எந்த பயிரினை சாகுபடி
செய்வது என்று தேர்வு செய்து 1வது பார்ட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு 1வது
பார்ட்டி ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் வேறு பயிரினை தேர்வு செய்து 1வது பார்ட்டியிடம்
சமர்பிக்க வேண்டும். ஆனால் சாகுபடி செய்யும் பயிரினை தேர்வு செய்யும் தார்மீக உரிமை
2வது பார்ட்டிக்கு மட்டுமே உண்டு. அதில் 1வது பார்ட்டிக்கு இடையூறு செய்யும் உரிமை கிடையாது . அதன் பின் இயற்கை
வழி விவசாயம் செய்வது தொடர்பானது என்பதால் செயற்கை வழி இடுபொருள்கள் ( உரம், பூச்சி
கொல்லி ) எக்காரணம் கொண்டும் சாகுபடி பரப்புக்குள்
பயன்படுத்த உரிமை கிடையாது.
இயற்கை வழி விவசாயம்
செய்கின்ற பரப்பளவைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறிய பகுதியாவது ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்ய
1வது பார்ட்டி சம்மதிக்க வேண்டும்.
2 வது பார்ட்டியால்
நடைபெறும் வேலைகளின் விவரங்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் 1 வது பார்ட்டிக்கு எழுத்துப்பூர்வமாக
தெரிவிக்க வேண்டியது அவசியமானதாகும். தவறும் பட்சத்தில் 1 வது பார்ட்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு
2வது பார்ட்டி உடன்பட வேண்டும்.
சாகுபடி செய்ய
ஆகும் மொத்த செலவில் ஒப்பந்தம் கையெழுதானவுடன் முதற்கட்ட வேலை ஆரம்பிக்க ஆகும் மொத்த
உற்பத்தி செலவில் 50% பிணைத் தொகையாக 2 வது
பார்ட்டிக்கு தந்து உதவ 1வது பார்ட்டி மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அதன்பிறகு மீதமுள்ள 50% பணத்தை 25% மற்றும் 25% எனப்பிரித்து
இரு தவணைகளாக ஒரு வருட காலத்துக்குள் தந்து உதவுவதுடன் சாகுபடி செய்கின்ற நிலத்தின்
பயிர் சாகுபடியின் நிகர லாபத்தில் 20% பங்கு தொகையை 1வது பார்ட்டி 2வது பார்ட்டிக்கு
கொடுக்க மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும். இதுவே இந்த முழு ஒப்பந்தத்தின் சாரம்சமாகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment