Friday 17 June 2011

சுயநலத்துக்காக அழிக்கப் படும் தமிழரின் அடையாளங்கள்.


சுயநலத்துக்காக அழிக்கப் படும் தமிழரின் அடையாளங்கள்.

  ஒரு நாட்டின் உண்மையான  முன்னேற்றத்திற்க்கும், மேம்பாட்டிற்கும் மரங்கள் மிகவும் முக்கியமானதாகும். அதிலும் சில வகையான மரங்களின் அனைத்து பாகங்களும் பயன் படும். அப்படி உள்ள ஒரு வகையான மரத்தின் இன்றைய நிலையை தான் நாம்  பார்க்கும் போதே என் மனது மிகவும் கவலை அடைந்தது. அது என்ன மரம் என்று உங்களுக்கு தெரியுமா நண்பர்களே அந்த மரத்தை பற்றி தெரியாதவன் தமிழனே அல்ல அது தான் நமது  தொன்று தொட்டு வளர்ந்து  பல பலனை கொடுக்கும்  கற்பக விருட்ச மரம். நமது மரம். அது தான் பனை மரம்.






 1998 –ல் இந்தியாவில் 19 கோடி மரங்கள் உள்ளன. அதிகபட்சமக 5 கோடி மரங்கள் தமிழகத்தில் இருந்தன. ஆனால் இன்று இருப்பதோ வெறும் 3 கோடி மரங்கள் தான். சுமார் 10 வருடங்களில் 2 கோடி மரங்கள் அழிக்க பட்டு வருகின்றன. ஏன் இந்த மரத்தை அழிக்கிறார்கள் என்று பார்த்தால் அதற்கு காரணம். Real estate வீட்டு மனை வியாபாரம் தான். ஒரு மரம் வளந்து பலன் தர சுமர் 10ஆண்டுகள் ஆகும் ஆனால் அதன் பயன் பல தலைமுறைக்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் மண் அரிப்பை தடுக்கிறது, வேலி பயிராகிறது. (பலனை அடுத்த கட்டுரையில் பார்க்கவும்) இப்படி உதவுகிற மரத்தினை அழிக்கும் காட்சியை நேரில் பார்த்ததும் எனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் தான் வந்தது. ஒரு மரம் வளர எவ்வளவு காலம் ஆகும். ஆனால் அதனை எந்திரங்கள் கொண்டு  ஒரு சில நிமிடங்களில் அழித்தி விடுகிறார்கள். இந்த அழிவு மரங்களுக்கு அல்ல மனிதர்களுக்கு தான்.
பனை மரத்தினை அழிவில் இருந்து காப்பாற்ற எங்களது அறக்கட்டளையில் 10000 பனை மரங்களை நடவு செய்ய உள்ளோம்.  வரும் டிசம்பர் மாதத்தில் இந்த வேலையை ஆரம்பிக்க உள்ளோம். பனை கன்றுகள் வைத்திருப்பவர்கள் உங்களால் முடிந்த அளவு கன்றுகளை தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம். உங்களிடம் இல்லை என்றாலும் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு தெரிய படுத்தவும்.

0 கருத்துரைகள்: