மருத நிலத்தில்
இரும்பின் பயன் பாடு
இரும்பு காலம்
இரும்பின் பயன்பாடு
தெரிந்த காலம் எனப்பட்டது. பெருங்கற்காலத்துடன் இணைந்து காணப்படுகின்றது. இந்த காலத்தில்
விவசாயம் கால்நடை முக்கிய தொழிலாக இருந்தது.நிலையான ஒரிடத்தில் வீடுகளை கட்டிக்கொண்டு
கிராம வாழ்க்கை வாழத்தொடங்கிய காலம். இந்த காலத்தில் இரும்பை உருக்கி ஆயுதமாகச் செய்யத்
தெரிந்திருந்தனர். உலோகங்களுக்கு இணையான மட்கலங்களையும் செய்யும் தொழிலில் கைதேர்ந்தவர்களாக
இருந்தனர். இந்தகாலம் கி.மு.1000லிருந்து கி.பி.300 வரையிலாகும்.
இரும்பு;
கற்கால மனிதர்கள்
தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் அல்லது தற்காப்புக்காகவும், வேட்டையாடுவதற்காகவும்
கல்லாயுதங்களைக் கண்டுபிடித்தனர்.ஆனால் நாளடைவில் கல்லாயுதங்களால் தங்களுடைய முழுமையான
தேவையை பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கல்லாயுதங்களைவிடக் கூர்மையான,
எளிதான ஆயுதங்களைத் தேட முற்பட்டனர். இதைப் பேன்ற தேடுதலால் உலோகம் எதிர்பாராதவிதமாக
அல்லது எதச்சையாகக் கண்டுபிடிக்கப் பட்டது என்று கூறலாம். கற்களைவிட எளிதாகவும், கூர்மையாகவும்
பயன்படுத்தப்பட்ட உலோகப் பயன்பாட்டில் செப்பு குறைந்த வெப்பத்தில் உருகுகின்ற உலோகம்
என்பதுடன் எளிதில் கிடைக்கின்ற உலோகமும் ஆகும். ஆனால் எளிதில் வளையும் தன்மையுடையது.
இதனால் செப்பைவிட உறுதியான உலோகம் ஒன்று தேவை
என்பதை உணர்ந்து தேடியுள்ளனர். இதன் விளைவாக இரும்பு கண்டுபிடிக்கப் பட்டது என்று கருதுகின்றனர்.
இரும்பின் பயன் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டிலிருந்து கொண்டு
வரப்பட்டதா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அகழ்வாய்வுகளின்
அடிப்படையில் இரும்பு பெருங்கற்கால மக்களுடன் இணைந்து காணப்படுகின்றன என்பது உண்மை.பெருங்கற்கால
ஈமச்சின்னங்களில் உலோகப்பொருட்களும் மற்ற பொருட்களும் படையல் பொருட்களாகக் காணப்படுகின்றன.
எனவே தமிழகத்தில் கி.மு.1200க்கு முன்பிருந்து இரும்பைப் பயன்படுத்திய மக்கள் தமிழகம்,
ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழ்ந்தனர். தமிழகத்தில் கோவை,தர்மபுரி, சேலம்,
வடஆர்க்காடு, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இரும்பை உருவாக்கியதற்கான
எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.சென்னைக்கு அருகில் பல இடங்களில் இரும்பை உருக்கிய
உலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலக்கியங்களில்
இரும்பு;
பையம்பள்ளி அகழாய்வில்
இரும்பு ஆயுதங்கள், இரும்பை உருக்கிய கசடு அதிக அளவில் கிடைத்துள்ளன. இதனால் இங்கு
இரும்பை உருக்கவும் அதைக் கொண்டு ஆயுதங்களைச் செய்யவும் மக்கள் தெரிந்திருந்தனர் என்று
அகழ்வாய்வாளர்கள் கருதுகின்றனர். பையம்பள்ளியில் இரும்பை உருக்கிய காலம் கி.மு.600
என்பது தெரியவருகின்றது.இங்கு இரும்பு ஆயுதங்களைச் செய்யும் பிரிவினர் இருந்தனர்.
கிருட்டிணகிரி
மாவட்டத்தில் குட்டுர் என்ற இடத்தில் கி.மு. 500ல் இரும்பை உருக்கிய உலை கிடைத்துள்ளது.
இங்குச் செய்யப்பட்ட அகழ்வாய்வில் இங்குள்ள மலை அடிவாரத்தில் இரும்புச் சிட்டங்கள்
(cinder), ஊதுகுழாய்கள் (vertified mouth),சாம்பல் போன்றனக் காணப்படுகின்றன. குட்டுர்
அகழ்வாய்வில் நீள வட்டவடிவமான உலைகள் இரண்டு கிடைத்துள்ளன. இவை 2.02 மீட்டர் நீளம்,
0.60 மீட்டர் அகலம், 0.45 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளன. செங்கல் சுவர்கள் இரண்டு பக்கங்களிலும்
காணப்படுகின்றன. இவற்றின் மையப்பகுதியில் உள்ளது காற்று ஊதுகின்ற பகுதியாகப் பயன்பட்டுள்ளது.
இதையடுத்துள்ளவை இரும்புத்தாது சூடாகத் தேவையான எரிப்பொருள் ஆகியன வைக்கப்பட்ட இடமாக
இருக்கலாம். இதைப் போன்ற பெரிய உலை மற்ற இடங்களில் இல்லை என்று கூறலாம்.
மோதூர்அகழ்வாய்வில்
இரண்டு வட்டவடிவங்கள் ஒன்றையடுத்து ஒன்று இருந்தன. இந்த இரண்டு வட்டங்களும் சிறிய குழாய்
போன்ற இணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வட்ட வடிவங்களின் அருகில் இரும்புச் சிட்டங்களுல்,
ஊதுக்குழாய்களும் செம்மண்ணால் செய்யப்பட்டதால் கருகிச் செந்நிறமாகக் காணப்பட்டது. மேலும்
அதன் அருகில் புடம் போடும் சிறிய கலங்கள் கிடைத்துள்ளது. இங்கும் இரும்புப் பொருள்கள்
ஆயுதங்கள், செப்பு வளையல் போன்றவை கிடைத்துள்ளன.
ஈரோடு மாவட்டத்தில்
கொடுமணல் அகழ்வாய்வில் இரும்பை உருக்கிய உலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள
சென்னிமலை என்ற இடத்தில் இரும்புத்தாது அதிக அளவில் கிடைக்கின்றன். இரும்பை உருக்கும்
ஆலை இருந்த இடத்தில் இரும்பு கசடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. உலை இருந்த இடத்தில்
வெள்ளை நிறத்தில் வட்டவடிவில் காணப்பட்டது.
உலையின் விட்டம் 1 மீட்டர் இருந்ததுடன் இங்கு ஏற்பட்ட சூட்டினால் மண் வெள்ளை சாம்பலாகக்
காணப்படுகின்றது. உலையின் அமைப்பு சுண்ணாம்பு களவாய் போன்றுக் காணப்படுகின்றது.இதன்
அடிப்பகுதியில் 15 செ.மீ நீளமும், 6 செ.மீ விட்டமும் கொண்ட சுடுமண்ணால் ஆன ஊதுலைகள்
பொருத்தப்பட்டுள்ளன. உலையில் இடப்பட்ட இரும்புத்தாது உருகி வருவதை இரும்பு தனியாகவும்
கசடைத் தனியாகவும் பிரித்தெடுக்கப் பட்டுள்ளன. இரும்பு உலையைக் சுற்றிலும் கசடுகள்
அதிக அளவில் காணப்படுகின்றன.இரும்பை உருவாக்கியத்தடையங்கள் மேலும் பல இடங்களில் தமிழகத்தில்
கிடைத்துள்ளன.
இரும்பினால் ஆன
கருவிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டவை. விவசாயம்
செய்யப்பயன்படுத்த பட்டவை, இமச்சின்னங்களில் இருந்த இரும்புப் பொருள்கள் பெரும்பாலும்
சிதைந்த நிலையிலுல், உருவம் தெரியாத நிலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கத்தி, நீண்டவாள்,
கேடயம், அம்புமுனை, அரிவாள்,மணி, வாள், கடப்பாரை, ஆணி, ஊக்கு, வளையல் போன்றன கிடத்துள்ளன.
ஈமச்சின்னங்களில் 4 அடி முதல் 5 அடி நீளமுள்ள நீண்ட வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கோடரி
பல அளவுகளில் காணப்படுகின்றன.இரும்புப் பொருள்கள் அனைத்தும் உலையில் வைத்துத் தட்டி
உருவாக்கப்பட்டவை.
ஆதிச்சநல்லூர்
பெருங்கற்காலச் சின்னம் தாழி வகையைச் சார்ந்தது. இங்கு இரும்பு, வெங்கலம், தங்கம் ஆகியவற்றிலான
பொருள்கள் கிடைத்துள்ளன. வெங்கலப் பொருட்கள் அழகான வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.
வெங்கலத்தினால் செய்யப்பட்ட சாடிகள் , வட்டவடிவமான கிண்ணங்கள், மூடிகள், போன்றன குறிப்பிடத்தக்கன.மூடிகள்
அலங்கார வேலைப்பாடுகளுடன் மூடிகளின் மேல் பிடி பறவைகள் போன்ற அமைப்பிலும் உள்ளன. இரும்பினால்
செய்யப்பட்ட அரிவாள்கள், மண்வெட்டிகள், கோடரிகள்,திரிசூலம், அம்புகள், வாள்,ஈட்டிகள்,
கிடைத்துள்ளன. இங்கிருந்த மக்கள் வெங்கலம்,
இரும்பு ஆகியவற்றைக் கொண்டு வேட்டையாடுவதற்கும், விவசாயம் செய்வதற்கும் தேவையான ஆயுதங்களைச்
செய்யத் தெரிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.தங்கதினால் ஆன 19 மகுடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மகுடங்கள்
தலையில் வைத்து கட்டுவதற்டு ஏற்றாற் போன்ற அமைப்பில் காணப்படுகின்றன.
நன்றி
பொதிகை குடும்பன்
0 கருத்துரைகள்:
Post a Comment