Thursday, 2 May 2013

மகாராசா இயற்கை கூட்டு பண்ணை – பழனி


மகாராசா இயற்கை கூட்டு பண்ணை – பழனி


18.4.2013 அன்று நம்மண் அமைப்பில் இருந்து பழனி அருகில் குதிரையாறு அணைக்கட்டு பகுதியில் இருக்கும் மகாராசா இயற்கை கூட்டு பண்ணையை பார்வையிட சென்றோம். இது 416 ஏக்கரில் 82 பேர் கூட்டாக தொடங்கப்பட்ட பண்ணையாகும். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்  இயற்கை எழில் கொஞ்சும் அப்பண்ணை தொடங்கி சுமார் 4 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது தான் இந்த பண்ணையில் உற்பத்தி வேலை தொடங்கி இருக்கிறது. சுமார் 25 ஏக்கரில் தான் விவசாயம் நடக்கிறது. மீதமுள்ள நிலம் மானாவரியாகதான் இருக்கிறது. நன்கு வளமான செம்மண் பூமி. பண்ணை முழுவதும் சூரிய ஒளி மின்சாரமே பயன்படுத்த படுகிறது. 10 நாட்டுமாடுகள், 15 ஆடுகள், 100கோழிகள் இருக்கிறது. 15 ஏக்கரில் மா, வாழை ஊடுபயிராக கத்தரி சாகுபடி செய்கிறார்கள்.  சுமார் 15 பேர் வேலை தங்கி வேலை செய்கிறார்கள். அது போக தின வேலைக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து தினமும் 25 பேர் வேலைக்கு வருகிறார்கள். ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு 250 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாய் கொடுகிறார்கள் . 2 நேரம் தேநீர் கொடுக்கிறார்கள். அனைத்து இடுபொருள்களும் உள்ளே தயாரிக்க தேர்ச்சி பெற்ற நபரை வைத்துள்ளார்கள்.  பண்ணையை பார்வையிட வருவவர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் தங்கும் இடம் கொடுத்து நன்கு உபசரிக்கிறார்கள். பண்ணையின் தங்கும் அறைகளுக்கு தமிழ் மன்னர்களின் பெயரை சூட்டியிருப்பது மிகவும் அருமை.  பண்ணையின் படங்கள்

பண்ணையின் எழில்
 பண்ணை அலுவலகம் , மற்றும் தங்கும் இடம்



பண்ணை நிர்வாகி கு.புகழேந்தி ஐயா.

 மானாவாரி உழவு
  பயிர்கள்
திராட்சை
 காற்றாடி மூலம் மின் சேகரிப்பு

வாழை  கத்தரி



சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு






 சூரிய ஒளி மின்சாரத்தினை சேகரிக்கும் பேட்டரி அறை

 தமிழ் மன்னர்களின் பெயர் சூட்டப்பட்ட அறைகள்







  5 hp மேட்டாருக்கு  சூரிய ஒளி மின் இணைப்பு அமைக்க  6.5 லட்சம் வரை செலவாகும்,

 நன்றி
நம்மண்


0 கருத்துரைகள்: