Saturday 5 December 2009

காட்டுவிலங்குகளை எட்டி ஓடவைக்கும் முட்டைக்கரைசல் தொழில்நுட்பம்

காட்டுவிலங்குகளை எட்டி ஓடவைக்கும் முட்டைக்கரைசல் தொழில்நுட்பம்


காட்டு மாடுகள், யானைகளின் தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு இந்த யுக்தி நல்ல பலனைத் தருகிறது.
 
 
கோழிக்குஞ்சு பொரிப்பகங்களில் கிடைக்கிற வீணான முட்டையைப் பயன்படுத்தினாலே போதும். பழைய பொரிக்காத, உடைந்த, நீர்த்துப்போன எந்த முட்டைகளையும் இதற்கு பயன்படுத்தலாம். சாப்பிடப்பயன்படுத்திய முட்டையின் கழிவுகளையும்கூட இதற்கு பயன்படுத்தலாம். முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ள வேண்டும். ஓடுகளைத் தனியாகப் பிரித்து உடைத்து தூளாக்கி செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். பாத்திரத்தில் கொட்டிய முட்டையின் வெள்ளைக்கரு, மஞ்சள்கரு இரண்டையும் கையால் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையில் 100 மிலி எடுத்துக்கொள்ள வேண்டும். (இரண்டு முட்டைகளிலேயே 100 மிலி கலவை கிடைத்துவிடும்). கெட்டுப்போய் நாற்றமடிக்கும் முட்டை என்றால் 100 மிலி போதும். நல்ல முட்டையாக இருந்தால் 200 மில்லி எடுத்துக்கொள்ளலாம். அதில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து வேலி ஓரம் உள்ள செடிகள், மரங்கள் மேல் ஸ்ப்ரேயர் மூலமாக தெளிக்க வேண்டும். செடி கொடிகளின் மேல் அடிக்கும் நாற்றத்தினாலேயே விலங்குகள் பக்கத்திலேயே வராது.
நமக்கு எவ்வளவு நிலமிருக்கோ அதன் தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்தலாம். தொந்தரவு அதிகமாக இருந்தால் தோட்டத்து பயிர்கள் மேலேயும் இதை தெளிக்கலாம். இந்த நாற்றம் 1 மாதம் வரை கூட இருக்கும். தொடர்புக்கு: டி.நரஹரி, மொபைல்: 94448 10639.

0 கருத்துரைகள்: