Thursday 31 December 2009

விவசாயம்:இன்றையநிலை

இந்திய விவசாயம் இன்று ஒரு கடும் நெருக்கடியில்சிக்கித்தத்தளிக்கிறது. விசம்போல் ஏறிவரும் இடுபொருள்களின் விலை உயர்வு ஒருபுறம், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காதது மறுபுறம் ! உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காதது இன்னொருபுறம் என பல்முனை தாக்குதல் நடத்துவதால் அவன் தற்கொலையை நோக்கி தள்ளப்படுகிறான்! கடந்த ஆண்டில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்பது பழமொழி! ஆனால் கடன் என்னும் வலையில் சிக்கி கால் பின்னி நீந்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறான் விவசாயி ! அவனுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது ? பசுமைப் புரட்சி அவனுக்கு இந்த பாதகத்தை தந்தது ! உற்பத்தியை பெருக்க இரசாயன உரங்களை போடுங்கள் என பிரசாரம் செய்தன விவசாய பல்கலைகழகங்கள் ! கடனை வாங்கி பல்கலை கழகங்கள் பரிந்துரைத்ததைக் காட்டிலும் கூடுதலாக கொட்டி பணிவைக் காட்டினான் விவசாயி ! ஆரம்பத்தில் விளைச்சல் அமோகமாக இருந்தது! காலம் செல்லச் செல்ல மண்ணின் உயிர் மெல்ல மெல்ல மறைந்தது ! விளைச்சல் குறைந்தது ! கடன் அவன் குரல்வளையை நெரித்தது ! மண்ணின் மைந்தன் மண்ணுக்கு உரமானான்!

0 கருத்துரைகள்: