Monday, 14 May 2012


சங்க இலக்கியத்தில் வேளாண்மை 3
ஆறுகள் பாய்ந்தோடும் மருத நிலத்தின் தொன்மையான பழந்தமிழ் மக்களான மள்ளர்களுடைய குடிகள் தென்னங்கீற்று வேய்ந்த கூரைகளைக் கொண்டதாய், முற்றத்தில் மஞ்சள் வளர்த்து, பூந்தோட்டம் சூழ்ந்து இருக்குமாம். இக்குடியிருப்புகளிலே பலாபழம்,தெங்கு (தென்னை), இளநீர்,கனிந்த வாழைப்பழம்,பனை நுங்கு இவற்றிற்கு பஞ்சம் இல்லையாம் என விளிக்கிறது பெரும்பானாற்றுப் படை. சில இடங்களில் வைகோல் வேய்ந்த குடிசைகளில் தானிய சேமிப்புக் குதிர்கள் இருக்குமாம். பந்தலிலே திரிகை, கலப்பை, சக்கரங்கள் வைத்திருப்பர்.மள்ளத்தியர்கள் முதுகிலே பின்னல் சடை பெண் யானையின் துதிகையைப் போல புரளுமாம். கைகளில் வளையல்கள் தவழுமாம்.மள்ளத்தியர் தம் கைக்குழந்தைகளைத் தரையில் தவழ்ந்து விளையாடும் படி விட்டு விட்டு, பலமுறை தீட்டிய அரிசிச் சோற்றை நண்டும், பீர்க்கங்காயும் சேர்த்துச் சமைத்துக் குழம்புடன் விருந்தினருக்கு வழங்குவர் என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கின்றது. பொழுது புலர்வதன் முன்பே வயல் வெளிகளில் வேலை செய்த களைப்புத் தீர, மாங்காய் ஊறுகாயுடன் கொள்ளும், பயறும் கலந்து சமைத்த கூழைக் குடிப்பர் என அகநானுறு கூறுகிறது.செஞ்சால் உழவர் பெரிய  எருதுகளைப் பூட்டி, உழுது, சேறுகலக்குவர்.மள்ளத்தியர் நாற்று நடுவர். உழவர் மடை அடைக்கப் பூவரசுக்கம்புகளை நிறுத்தி, கரும்புகளைக் குறுக்கே வைத்துக் கட்டுவர் நெல்லரியும் பெண்கள் கல் என்று கருதி ஆமையின் முதுகின் மேல் அரிவாள் தீட்டுவர் எனப் புறநானுறு பாடல் 379 தெரிவிக்கின்றது
-- 
                     

எஞ்சா மரபின் வஞ்சி!

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: பாடாண் . துறை: இயன்மொழி.

தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,
கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல,
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

சு.ஆனந்தராஜ் (இளநிலை விவசாய பண்பாடு)
  S.ANANTHARAJ. BSC (AGRICULTURE )
   
                         அலை பேசி ; +91 9487269907
                                                         +91 8754021718
 
                               organicananth@gmail.com,
                             organicanantharaj@yahoo.co.in
   
வலை தளம்    www.organicananth.blogspot.com,
 ''தமிழரை தலை நிமிர்த்தும் வரை தளர மாட்டோம்''
            ’’ஒன்று படுவோம்! உயர்வோம்! உயர்த்துவோம்!’’


0 கருத்துரைகள்: