Tuesday, 24 April 2012


இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (International federation for organic agriculture movement) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

1.
ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மையானது மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.

2.
உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
காணப்படும் உயிர்ச்சூழல் நிலைகளின் முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயற்கை வேளாண்மை இயைந்து செயல்பட்டு, சுற்றுப்புறசூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்

3.
நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவற்றுடன் இயற்கை வேளாண்மை உறவுகளை ஏற்படுத்தி நடுநிலையாக செயல்படவேண்டும்.

4.
பராமரிப்பு பற்றிய கோட்பாடு
தற்பொழுது வாழும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு இயற்கை வேளாண்மை கவனமான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.

மேற்கூறப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்படவேண்டும்.

இயற்கை வேளாண்மையின் முக்கியமான குணங்கள்
ஒரு பகுதியில் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல மூலாதாரங்களை உபயோகப்படுத்துதல்
உயிராதாரங்களின் உற்பத்தித் திறன் மற்றும் சூரிய ஒளியினை முறையாகப் பயன்படுத்துதல்
மண்ணின் வளத்தினை பராமரித்தல்
தாவர மற்றும் கரிம சத்துகளை அதிகபட்சமாக மறுசுழற்சி செய்தல்
இயற்கைக்கு மாறான பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ உபயோகப்படுத்தாமல் இருத்தல் (உதாரணமாக வேதியில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்)
விவசாய நில உபயோகம் மற்றும் உற்பத்தி முறையில் பல்லுயிர் பெருக்க முறைகளை உபயோகித்தல்
பண்ணை விலங்குகளை அவற்றின் சுற்றுப்புற வேலைகளுக்கேற்ப அவற்றினை பராமரித்தல் மற்றும் அவற்றின் இயற்கையான குணநலன்களை அனுமதித்தல்
இயற்கை வேளாண்மையானது சுற்றுப்புற சூழ்நிலையுடன் இயைந்த உற்பத்தி முறையாகும். இம்முறை வேளாண்மையானது சிறிய விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. இயற்கை வேளாண்மை மூலம் வறுமையினை ஒழிக்கவும், உணவுப்பாதுகாப்பினையும் கீழ்க்கண்ட செயல்முறைகளின் மூலம் உதவுகிறது.

குறைந்த வேளாண் இடுபொருள் உபயோகப்படுத்தும் இடங்களில் விளைச்சலை அதிகப்படுத்துதல்
புவியில் வாழும் பல்வேறு உயிர்களை பாதுகாக்கவும், பண்ணையிலுள்ள மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை மூலாதாரங்களை பாதுகாத்தல்
உற்பத்தி செலவினை குறைத்து வருமானத்தினை அதிகப்படுத்துதல்
பாதுகாப்பான, பல்வேறு விதமான உணவுகளை உற்பத்தி செய்தல்
நீண்ட நாட்களுக்கு வேளாண் உற்பத்தியினை பராமரித்தல்


இயற்கை மேலாண்மை- ஒரு ஒருங்கிணைந்த செயல்முறை
தத்துவம்

இயற்கை வேளாண்மை பண்ணையிலுள்ள அனைத்து உற்பத்தி முறைகளும் ஒன்றோடொன்று இணைத்து, ஒரு உற்பத்தி முறைக்கு மற்ற உற்பத்தி முறை உதவும் வகையில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த முறையாகும்.
பயிர்களின் சத்தின் ஆதாரமாகவும், பல்வேறுபட்ட உயிராதாரங்களின் மூலம் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், சுழல் முறையில் பயிரிடுதல், பல்வேறு பயிர்களை ஒருசேர பயிரிடுவதன் மூலம் மண்ணின் வளத்தினை பாதுகாத்தல், மாடுகளின் மூலம் பண்ணையிலுள்ள ஆதாரங்கள் மேலாண்மை மற்றும் உற்பத்தியினை அதிகப்படுத்துதல் போன்ற அனைத்திற்கும் நலமான உயிர் ஓட்டமுள்ள மண் அவசியம்.
இயற்கை முறை மேலாண்மையின் மூலம் தேவைக்கு அதிகமாக மூலாதாரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை ஏற்படுத்தாமல், தேவைக்கேற்ப மூலதாரங்களை உபயோகித்து உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை மூலாதாரங்களை சேமித்து வைத்தல்


முக்கியமான படிகள்
மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வெப்பநிலையினை மேலாண்மை செய்தல்
மழைநீரை சேமித்தல்
சூரிய ஆற்றலை அதிகபட்சமாக சேமித்தல்
இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு
இயற்கை சுழற்சி முறைகள் மற்றும் உயிர்வாழ் முறைகளை பராமரித்தல்
விலங்குகளை ஒருங்கிணைத்தல்
புதுப்பிக்கவல்ல ஆற்றல்களை அதிகமாக சார்ந்திருத்தல் (உதாரணமாக விலங்கின ஆற்றல்)


எப்படி அடைவது
1.
மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வேதியியல் பொருட்களை வேளாண் உற்பத்திக்கு உபயோகப்படுத்தாமல் இருத்தல், பயிர் உப பொருட்களை உபயோகப்படுத்துதல், கரிம மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துதல், பயிற்சுழற்சி முறை மற்றும் பல்வேறு பயிர்களை பயிரிடுதல், அதிகமாக மண்ணினை தோண்டாமல், மண்ணின் மீது பசுந்தாழ் உரங்கள் மற்றும் உயிர் பொருட்களை இடுதல்

2.
வெப்பநிலை மேலாண்மை செய்தல்
மண்ணின் மீது பசுந்தாழ் உரங்களை போட்டு மூடி வைத்தல் மற்றும் வரப்புகளில் மரங்கள் மற்றும் புதர் வகை தாவரங்களை நடுதல்

3.
மண் மற்றும் மழைநீரினை சேகரித்தல்
மழைநீரினை சேகரிக்க சேகரிப்பு தொட்டிகளை கட்டுதல், சரிவான நிலங்களில் மழை நீரினை சேகரிக்க வரப்பு போன்ற அமைப்புகளை நிறுவதல், சரிவான இடங்களில் வரிசையாக மரங்களை நடுதல், பண்ணைக்குட்டைகளை தோண்டுதல், குறைந்த உயரமுடைய செடிகளை வரப்புகளில் நடுதல்

4.
சூரிய ஆற்றலை சேகரித்தல்
பல்வேறு வகை பயிர்களை நடுவதன் மூலம் வருடம் முழுவதும் பசுமையினை வயல்களில் பராமரித்தல்

5.
இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு

உற்பத்தி செய்த விதைகளை உபயோகித்தல், பண்ணையிலேயே உரத்தினை உற்பத்தி செய்தல், மண்புழு உரம், திரவ உரம், தாவர கழிவுகளை உபயோகித்தல்

6.
உயிராதாரங்களை பராமரித்தல்
உயிரினங்கள் வாழ்வதற்கு போதுமான, தகுந்த வாழ்விடங்களை உருவாக்குதல், பூச்சிக்கொல்லிகளை எப்பொழுதும் உபயோகிக்காமல் இருத்தல், பல்வேறு பட்ட உயிரனங்களை பெருக்குதல்

7.
விலங்குகளை ஒருங்கிணைத்தல்
இயற்கை வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் கால்நடைகளாகும். இவை அவற்றின் உற்பத்தி பொருட்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சாணம், மற்றும் சிறுநீர் போன்ற மண் உரங்களையும் அளிக்கின்றன.

8.
புதுப்பிக்கவல்ல ஆற்றலை உபயோகித்தல்
சூரிய ஆற்றல், சாண எரிவாயு, காளைகளின் மூலம் நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர் மற்ற இதர இயந்திரங்களை உபயோகித்தல்.



இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்



இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்
i.
உள்கட்டமைப்பு
பண்ணையில் 3-5% சதவிகித இடத்தினை, மாடுகள், மண்புழு உரத்தயாரிப்பு, உர உற்பத்தி கிடங்கு, போன்றவற்றிற்கேற்றவாறு ஒதுக்கிடவேண்டும்
மழைநீரினை சேமிக்க, 7X3X3 மீட்டர் அளவிற்கு குழிகளை வெட்டி மழைநீரினை சேகரிக்க வேண்டும். இவ்வாறான குழிகளை ஒரு ஹெக்டேருக்கு ஒரு குழி என்ற விகிதத்தில் சறுக்கலாக அதிக மழைநீர் சேகரிக்கும் இடங்களில் தோண்டவும்.
முடியுமானால், 20 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவிலான பண்ணைக்குட்டையினை நிறுவலாம்
திரவ உரத்தினை தயாரிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு 200 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியினை நிறுவ வேண்டும். மற்றும் சில தொட்டிகள் தாவர கழிவுகளை போடுவதற்கும் நிறுவ வேண்டும்.
5
ஏக்கர் அளவுள்ள நிலத்திற்கு 1-2 மண்புழு தயாரிப்பு படுக்கைகள், NADEP கம்போஸ்ட் தொட்டி, 2-3 உரத்தொட்டிகள் போன்றவற்றை நிறுவ வேண்டும்.
இவ்விடங்களில், தண்ணீர் பாய்ச்ச கிணறு மற்றும் பம்ப் போன்றவற்றையும் நிறுவலாம்.


ii.
வாழ்விடம்
கிளைரிசிடியா, மர அகத்தி, சுபாபுல், கேசியா டோரா மற்றும் இதர மண்ணில் உயிர் நைட்ரஜன் தக்க செய்யும் மரங்களை வரப்புகளில் நடவ வேண்டும் (5 ஏக்கர் நில அளவுள்ள பண்ணைக்கு, 1.5 மீட்டர் அகலத்திற்கு, 800-1000மீ நீலம் அளவுக்கு மர வளர்ப்பு தேவை)
சில இடங்களில் கீழ்க்கண்ட மரங்கள் அல்லது புதர்செடிகளை நட வேண்டும். எடுத்துக்காட்டாக, வேம்பு -3-4 மரங்கள், புளிய மரம் ஒன்று, அத்தி மரம் 1-2, இலந்தை புதர்கள் 8-10, நெல்லி -1-2, சீதாப்பழ மரம் அல்லது முருங்கை 2-3 மற்றும் 2-3 பழ மரங்கள்
கிளைரிசிடியா மர வரிசைகளுக்கு இடையில் பூச்சிக்கொல்லித்திறன் வாய்ந்த அடொதோடா, நொச்சி, எருக்கு, நெய்வேலி காட்டமணி, ஊமத்தை போன்ற தாவரங்களை நடவும்.
பொது உபயோக இடத்திலுள்ள மரங்களை முழுவதும் வளர்வதற்கு அனுமதிக்கவேண்டும். பண்ணை வரப்பிலுள்ள மரங்களையும், புதர் செடிகளையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடுதல் வேண்டும். பின்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை வெட்டிவிட வேண்டும்.
கிளைரிசிடியா மரக்கன்றுகளை பெரிய வரப்புகளில் நெருக்கமாக பண்ணையினை சுற்றிலும் நடவேண்டும். இவை உயிர் வேலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணில் நைட்ரஜன் சத்தினை நிலைநிறுத்தவும் பயன்படுகின்றன.
400
மீட்டர் நீளமுள்ள கிளைரிசிடியா செடிகள், மானாவாரி சூழ்நிலையில், நட்ட மூன்றாம் வருடத்திற்கு பின்பு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 22.5 கிலோ நைட்ரஜனை ஒரு வருடத்திற்கு தரவல்லது. நட்ட 7 வருடத்திற்கு பின்பு, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 77 கிலோ நைட்ரஜனைத் தரவல்லவை. நீர்பாய்ச்சும் நிலங்களில் இந்த நைட்ரஜன் அளவு 75-100 சதவிகிதம் அதிகரிக்கும். நீர் பாய்ச்சும் தருணங்களில் வருடத்திற்கு 3-4 முறையும், நீர் பாய்ச்சாத தருணங்களில் 2 முறையும் அறுவடை செய்யலாம். கிளைரிசிடியா செடிகளை 5.5 அடி உயரத்திற்கு மேல் வளரவிடக் கூடாது, ஏனெனில் இந்த உயரத்திற்கு மேல் அவை வளர்ந்தால் நிலத்தில் நிழல் அதிகம் விழும். இதன் இலைகளை பசுந்தாழ் இலை உரமாக பயன்படுத்தலாம் இவற்றை அறுவடை செய்து மண்ணுடன் கலந்து விதை விதைப்பதற்கு முன்பு உரமாக பயன்படுத்தலாம்


10
ஏக்கர் அளவிலான இயற்கை வேளாண்மை பண்ணையின் வரைபடம்



இயற்கை வேளாண்மைக்கு மண்ணை தயாரித்தல்
அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை

அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை (Low input alternative)

முதல் வருடத்தில், ஒரே சமயத்தில் பல்வேறு வயதுடைய பயறு வகை பயிர்களை - அதாவது, முதல் 60 நாட்கள் பயிர், பின் 90-120 நாட்கள் பயிர், பின்பு 120 நாட்கள் பயிர் ஆகியவற்றை, வரிசையாக பயிரிடலாம். தானியங்களை/பச்சை காய்களை உருவி எடுத்து விட்டு, பின் எல்லா செடிகளையும் களைச்செடிகளுடன் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற விகிதத்தில் இயற்கை உரத்தினை நிலத்தில் இடவும். பின்பு தானியங்களுடன் பயறு வகைகளையும் ஒன்றாக, ஊடுபயிர் அல்லது தொடர் பயிராகவோ பயிரிடலாம். அறுவடைக்குப்பின் இந்த செடிகளை பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்த வேண்டும்
தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் இருந்தால் வெயில் காலத்தில் வளரும் பயறு வகை பயிரினை, காய்கறிகளுடன் சேர்த்து பயரிடலாம். அறுவடைக்கு பின்பு இந்த இரண்டு செடிகளையும் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பயிரிடும் தருணத்திலும் திரவ உரத்தினை வயல்களில் 3-4 முறை இடவும்
ஆ. அதிக இடுபொருளுக்கான மாற்று முறை

மண்ணில் 2.5 டன் தொழுஉரம் அல்லது மண்புழு உரம், 500 கிலோ எண்ணெய் பிண்ணாக்கு, 500 கிலோ ராக் பாஸ்பேட், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் போன்றவற்றை இடவும்
3-4
வகையான வேறுபட்ட பயிர்களை வரிசையாக விதைக்கவும். இதில் 40 சதவிகிதம் பயறு வகைகளாக இருக்கவேண்டும். அறுவடைக்குப்பின் அடுத்த விதைப்புக்கு முன் எல்லா செடிகளையும் பசுந்தாழ் உரமாக பயன்படுத்தவும். இரண்டாம் விதைப்பு பருவத்திலும் இதே போன்று உரங்களைப் பயன்படுத்தவும்
திரவ உரத்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவுக்கு 3-4 முறை பயிரிடும் தருணத்தில் நீருடன் கலந்து வயல்களுக்குப் பாய்ச்சவும்.
12-18
மாதங்களுக்குப் பிறகு இந்த மண் இயற்கை முறை வேளாண்மைக்கு எந்த பயிர்களையும் இணைத்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அடுத்த 2-3 வருடங்களுக்கு எந்த பயிரிடுடனும் பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது இணைப்பயிராகவோ பயிரிடலாம். பயறு வகைப் பயிர்களுக்கு குறைந்தது 30 சதவிகிதம் வரை பயிர்க்கழிவுகளாக இருக்கமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பின்பு இப்பயிர்க்கழிவுகளுடன் திரவ உரத்தினை சேர்த்து அடி உரமாக மண்ணில் இடலாம்.



iv.
பலவகையான பயிர்களை பயிரிடுதல் அல்லது சுழற்சி முறையில் பயிரிடுதல்
இயற்கை முறை வேளாண்மையில், ஒரு தனிப்பட்ட பயிர் பயிரிடும் முறை பயன்படுத்தப்படமாட்டாது.
முழுப்பண்ணையிலும் 8-10 பயிர்கள் எல்லா சமயத்திலும் கண்டிப்பாக பயிரிடப்பட்டிருக்கவேண்டும்
ஒவ்வொரு வயலிலும் குறைந்தது 2-4 வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கவேண்டும். அவற்றுள் ஒன்று கட்டாயாமாக பயறு வகை தாவரமாக இருக்கவேண்டும்
சில சமயத்தில் ஒரு வயலில் ஒரு விதமான பயிர் மட்டுமே பயிரிடப்பட்டு இருப்பின், அடுத்த வயலில் வெவ்வேறு விதமான பயிர்களை பயிரிடவேண்டும்
மூன்று அல்லது நான்கு வருட பயிற்சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும்
அதிக சத்துகள் தேவைப்படும் தாவரத்திற்கு முதலில் பயிரிட்டு பின்பு பயறு வகை பயிர்களை பயிரிடவேண்டும்.
பல்வேறு விதமான தாவரங்களைப் பயிரிடுவதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், 50-150 காய்கறி செடிகளை தோராயமாக வீட்டு உபயோகத்திற்காகவும், கேந்தி எனப்படும் துளுக்க சாமந் தி செடிகளை நூறு செடிகள் ஒரு ஏக்கருக்கு என்ற விகிதத்திலும் பயிரடவேண்டும்.
பயறு வகை மற்றும் காய்கறி பயிர்களுடன் அதிக சத்துகள் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களையும் போதுமான உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.


v. 5.
உயிருள்ள அதிக சத்து மிகுந்த இயற்கை மண்
வளமுள்ள, உயிர்ச்சத்து மிகுந்த மண்ணில் கரிம கார்பனின் அளவு, குறைந்தது 0.8-1.5% சதவிகிதம் இருக்கவேண்டும்
நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்ளின் உபயோகத்திற்காக எந்த சமயத்திலும் போதுமான அளவு உலர்ந்த, பாதி மக்கிய அல்லது முழுவதும் மக்கிய கரிமபொருள் மண்ணில் இருக்கவேண்டும்
ஒரு கிராம் மண்ணில் 1 x 108 என்ற எண்ணிக்கையில் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசிட்டிஸ் போன்றவை கட்டாயமாக இருக்கவேண்டும்
சிறிய உயிரனங்களும், பூச்சிகளும், எறும்புகளும் கட்டாயமாக போதுமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்


vi.
மண்ணில் உரமிடுதல் மற்றும் மண்ணை வளப்படுத்துதல்
கிளைரிசிடியா மற்றும் இதர வரப்புகளில் வளர்த்தப்பட்ட மரங்களின் கிளைகள், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தொழுஉரம், மண்புழு உரம், சாணம் மற்றும் சிறுநீர், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி மண்ணின் சத்தினை அதிகப்படுத்தலாம்
உயிர்உரங்கள் மற்றும் அடர்த்தியான உரங்களான தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்குகள், கோழி எரு, காய்கறிகழிவுகள், மற்ற இதர தயாரிக்கப்பட்ட உரங்களை தகுந்த விகிதத்தில் கலந்து போதுமான அளவுகளில் உபயோகிக்கவேண்டும்
அதிக அளவிலான தொழுஉரத்தினை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்
பயிற்சுழற்சி முறையினை மாற்றியமைத்தல், பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி இடுபொருட்களை நன்றாக உபயோகப்படுத்தவேண்டும்
பயிரின் வகை மற்றும் பயிருக்குத் தேவைப்படும் சத்துகளின் தேவைக்கேற்ப பண்ணையின் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் இடுபொருட்களின் தேவையினை அறியலாம்
மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் இதர உயிர்ப்பொருட்களின் செயல்திறனை பராமரிக்க திரவ உரங்களை மண்ணில் இடுவது அவசியமாகும். எல்லா விதமான பயிர்களுக்கும் 3-4 முறை திரவ உரத்தினை இடலாம்
மண்புழு உரம், கம்போஸ்ட் டீ, மாட்டின் சிறுநீர் போன்றவை தெளிப்பாக உபயோகப்படுத்தப்படும் போது பயிர்களின் வளர்ச்சியினை அதிகரிக்கும் தன்மையுடையவை. பயிரினை விதைத்து 25-30 நாட்கள் கழித்து 3-5 முறை இவற்றை தெளிப்பதால் பயிர் உற்பத்தி அதிகரிக்கும்.
வெரிமிவாஷ், பசுமாட்டு சிறுநீர் மற்றும் இயற்கை எருக்களின் கரைசல் ஆகியவை மண்ணின் உயிரினங்கள் வளர பெரிதும் உதவுகிறது. விதைத்த 25 - 30 நாட்கள் கழித்து, 3-5 முறை இவற்றை தெளித்தல் அதிக விளைச்சலை கொடுக்கும்.
இயற்கை முறை வேளாண் மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த செயல் முறையாகும். எல்லா அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்ட, தனியாக செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரு தனிப்பயிர் ஒரு சமயத்தில் வளர்க்கப்படாததால், ஒரு பயிருக்கான சத்து மேலாண்மையினை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். சத்து மேலாண்மை முறையின் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தானிய மற்றும் பயறுவகை பயிர்களை ஒன்றாக பயிரிடல்

ஆடி பருவத்தில் சோளம், கம்பு அல்லது மக்காச்சோளம் அல்லது பருத்தி போன்றவற்றை பயறு வகைகளுடன் சேர்த்து பயிரிடலாம். தானிய வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 60 சதவிகித இடத்தையும், பயறு வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 40 சதவிகித இடத்திலும் வரிசையாக பயிர் செய்யப்படவேண்டும். இந்நிலத்தில் 1.5-2 டன் தொழுஉரம், 500 கிலோ மண்புழு உரம், 100 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒன்றாக கலந்து அடியுரமாக இடவேண்டும். உயிர் உரங்கள் விதை மற்றும் மண் நேர்த்திக்கு பயன்படுத்தலாம். முன்பு பயிர் செய்யப்பட்ட பயிர்களின் கழிவுகளை திரவ உரத்துடன் சேர்த்து மண்ணின் மேற்பரப்பு முழுவதும் விதைப்புக்கு பின் உடனே இடவேண்டும். களைகளை கையால் எடுக்கவேண்டும். களைகளையும் உரமாக பயன்படுத்திடலாம். 200 லிட்டர் திரவ உரத்தினை ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் 3-4 முறை நீர் பாய்ச்சும்போது கலந்து உபயோகிக்கலாம் அல்லது ஒரு ஏக்கர் நிலம் முழுவதிலும் சமமாக மழை பெய்யும்போது தெளிக்கவேண்டும். உயிர் டைனமிக் தயாரிப்புகளான மண் சாண குழி அல்லது இ.எம் தயாரிப்புகள் போன்றவற்றையும் தொழு உரத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம். மண்புழு உர திரவ கழிவு அல்லது மாட்டின் சிறுநீர் போன்றவற்றை அல்லது இவை இரண்டும் 1:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை 2-3 முறை தெளிப்பதால் பயிர் உற்பத்தியினை அதிகரிக்கலாம்.

மார்கழி பட்டத்தில், முதலில் வேகமாக வளரக்கூடிய கீரை வகைகளான பசலைக்கீரை அல்லது பாலக்கீரை போன்றவற்றை பயிரிட்டு பின், தானிய வகை பயிரினை பயிரடலாம். காய்கறிகளையும், பயறு வகைகளுடன் சேர்ந்து பயிர் செய்யலாம். தானிய பயிருக்கேற்றவாரு உரங்களை இந்தப்பருவத்திலும் உபயோகப்படுத்தலாம். காய்கறி பயிர்களுக்கு 500 கிலோ தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 50 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்திற்கு உரமாக உபயோகப்படுத்தலாம். மண் நன்றாக உரமேற்றப்பட்டபின், இயற்கை வேளாண்மை முறை பின்பற்ற ஆரம்பித்து 3-4 ஆண்டுகளுக்குப் பின்பு உபயோகிக்கும் உரங்களின் அளவினை 50 சதவிகிதமாக குறைத்துக்கொள்ளலாம்.



vii.
விதை நேர்த்தி
இயற்கை முறை மேலாண்மையில், கட்டுப்பாடு முறைகள் அதிக பிரச்சனைகள் காணப்படும் போது மட்டுமே கையாளவேண்டும். நோயில்லாத விதையினையும், நோய் எதிர்ப்பு ரகங்களையும் உபயோகிப்பது சாலச்சிறந்தது. விதை நேர்த்தி செய்ய ஒரு தரமான முறை தற்பொழுது இல்லை. எனவே விவசாயிகள் பல்வேறு முறைளை உபயோகிக்கலாம். அத்தகைய முதன்மையான விவசாயிகள் கண்டுபிடித்த விதை நேர்த்தி முறைகள் கீழ்வருமாறு.

530
டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையுள்ள நீரில் விதைகளை 20-30 நிமிடங்களுக்கு ஊறவைத்தல்
மாட்டின் சிறுநீர் அல்லது மாட்டின் சிறுநீர் மற்றும் கரையான் புற்று மண் கலந்த பசையினை விதையுடன் கலத்தல்
பீஜாஅம்ருத் கரைசல் - 50 கிராம் மாட்டு சாணம், 50 மிலி மாட்டு சிறுநீர், 10 மிலி பால், 2-3 கிராம் நீர்த்த சுண்ணாம்பு போன்றவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் (பீஜ்ராநட்) கலந்து விதைகளை அதை 12 மணிநேரம் வைத்திருத்தல்
250
கிராம் பெருங்காயத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 கிலோ விதை நேர்த்தி செய்யலாம்.
மஞ்சள் தூள், மாட்டு சிறுநீருடன் கலத்தல்
பஞ்சகாவிய சாறு
டிரைக்கோடெர்மா விரிடி (4 மில்லி கிராம் ஒரு கிலோ விதைக்கு) அல்லது சூடோமோனாஸ் புளோரோஸன்ஸ் (10 கிராம் ஒரு கிலோ விதைக்கு)
உயிர் உரங்கள் (ரைசோபியம் அல்லது அசோபாக்டர் +பிஎஸ்பி)


viii.
திரவ உரத்தினை தயாரித்தல்
பல விதமான திரவ உரங்கள் பல மாநிலங்களிலுள்ள விவசாயிகளால் தயாரிக்கப்படுகின்றன. சில முக்கியமான பரவலாக உபயோகப்படுத்தப்படும் திரவ உரத்தயாரிப்பு முறைகள் பின்வருமாறு

சஞ்சீவாக்
நூறு கிலோ மாட்டு சாணத்துடன், 100 லிட்டர் மாட்டு சிறுநீர், 500 கிராம் வெல்லம் போன்றவற்றை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு 500 லிட்டர் மூடப்பட்ட டிரம்மில் ஊற்றிவைக்கவும். இதனை 10 நாட்களுக்கு நொதிக்கவைக்கவும். இதனுடன் 20 மடங்கு தண்ணீர் கலந்து அதனை ஒரு ஏக்கர் மண்ணில் தெளிக்கலாம் அல்லது நிலத்திற்கு பாய்ச்சும் நீரில் கலந்து வயல்களுக்கு பாய்ச்சலாம்.

ஜீவாம்ருதம்
பத்து கிலோ மாட்டு சாணத்துடன் 10 கிலோ மாட்டு சிறுநீர், 2 கிலோ வெல்லம் எதாவது ஒரு தானியத்தின் மாவு 2 கிலோ, உயிர் மண் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரைக் கலந்து இதனை 5-7 நாட்களுக்கு நொதிக்கவிடவும். இந்த நாட்களில் இக்கரைசலை ஒரு நாளைக்கு 3 முறை கலக்கி விடவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீருடன் கலந்து பாய்ச்சலாம்.

பஞ்சகாவ்யா
சாண எரிவாயு கழிவு 4 கிலோ, புதிய மாட்டு சாணம் 1 கிலோ , மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுபால் 2 லிட்டர், மாட்டு தயிர் 2 லிட்டர், மாட்டு நெய் 1கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலக்கி 7 நாட்களுக்கு நொதிக்கவைக்கவேண்டும். இந்த ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இக்கரைசலை கலக்கி விடவேண்டும். 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் தெளிக்கவும். ஒரு ஏக்கர் மண்ணில் தெளிப்பதற்கு அல்லது நீருடன் பாய்ச்சுவதற்கு 20 லிட்டர் பஞ்சகாவ்யா தேவை.

ஊட்டமேற்றிய பஞ்சகாவ்யா
ஒரு கிலோ புதிய மாட்டு சாணத்துடன், மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுப்பால் 2 லிட்டரும், தயிர் 2 லிட்டரும், நெய் ஒரு கிலோவும், கரும்புச்சாறு 3 லிட்டர், தேங்காய் தண்ணீர் 3 லிட்டர், மசித்த வாழைப்பழம் 12 கலந்த கலவையினை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும். மேற்கூறிய பஞ்சகாவ்யா கரைசலை நிலத்திற்கு பாய்ச்சுவது போலவே இதனையும் உபயோகிக்கவும்.



ix.
பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் மேலாண்மை
இயற்கை வேளாண் பண்ணை மேலாண்மையில் வேதியியல் பொருட்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

உழவியல் முறை
இயந்திரவியல் முறை
உயிரியல் முறை
இயற்கை முறையில் ஒத்துக்கொள்ளப்பட்ட வேதியியல் மாற்றுப்பொருட்களை உபயோகிப்பது
உழவியல் முறை
நோயற்ற விதைகளை உபயோகித்தல் அல்லது நோய் எதிர்ப்புத்திறன் வாய்ந்த பயிரினங்களை உபயோகிப்பது, இயற்கை வேளாண் முறையில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறையாகும். பண்ணையில் பல்வேறு உயிரினத்தன்மையினை பராமரித்தல், முறையான பயிற்சுழற்சி முறை, பல்வேறு பயிர்களை பயிரிடுதல், வாழ்விடங்களை மாற்றியமைத்தல், பூச்சிகளை பிடிக்கும் பொறிப் பயிர்களை உபயோகித்தல் போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பினை கட்டுக்குள் வைக்கலாம்

இயந்திரவியல் மாற்றுமுறை
பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது தாவரங்களையும் அவற்றின் பாகங்களை பண்ணையிலிருந்து அகற்றுதல், பூச்சிகளின் முட்டைகளையும் மற்றும் புழுக்களையும் சேகரித்து அழித்தல், விளக்குப் பொறிகளை உபயோகித்தல், ஒட்டும் வண்ண தட்டுகளை உபயோகித்தல் மற்றும் இனக்கவற்ச்சி பொறிகளை உபயோகித்தல் போன்றவை பூச்சிகளை கட்டுப்படுத்த நன்கு செயல்படும் இயந்திரவியல் மாற்று முறைகளாகும்.





உயிரியில் மாற்றுமுறைகள்
பூச்சிகளை பிடிக்கும் விலங்குகளையும், நுண்கிருமிகளையும் உபயோகிப்பதன் மூலம் பயிர்களை பூச்சித்தாக்குதலிருந்து காத்து பூச்சிகளை பொருளாதார இழப்பு ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துகிறது. டிரைக்கோகிரம்மா முட்டைகள் 40000-50000/ஒரு ஹெக்டேர் நிலத்தில் மெதுவாக வெளியிடுதல், கிலோநஸ் பிளாக்பர்னி 15000-20000 /ஒரு ஹெக்டேர், அபான்டெலஸ் 15000-20000 /ஒரு ஹெக்டேர், கிரைசோபர்லா 5000 /ஒரு ஹெக்டேர் போன்றவற்றை மெதுவாக நிலத்தில் விதை விதைத்து 15 நாட்கள் கழித்து வெளியிடுமாறு செய்து விட்டு, பின்பு விதை விதைத்து 30 நாட்கள் கழித்து மற்ற ஒட்டுண்ணிகளையும், வெளியிடுதல் மூலம் இயற்கை வேளாண்மை பண்ணையில் பூச்சிகளின் தாக்கத்தினை எளிதில் கட்டுப்படுத்திடலாம்

உயிர்பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்
டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டி.ஹாராஷியானம் அல்லது சூடோமோனாஸ் புளூரெசன்ஸ் போன்றவற்றை தனியாகவோ அல்லது இவற்றை கலந்தோ 4 மில்லி கிராமினை ஒரு கிலோ விதையில் கலந்து உபயோகிப்பதன் மூலம் விதையின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இது தவிர பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபைலே, நியுமெரியா ரைலேயி, வெர்ட்டிசிலியம் போன்ற சந்தையில் கிடைக்கும் இதர உயிர் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகித்து ஒரு குறிப்பிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். பேசில்லஸ் துரின்ஜென்ஸ், ஸ்டீனீபிரியோனிஸ் மற்றும் பே. துரின்ஜென்ஸ் சாண்டிகோ போன்றவை வண்டு வகை பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தவும் மற்றும் இதர சில பூச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. பி.டி. எனப்படும் மேற்கூறிய பூஞ்சை டயமன்ட் கருப்பு மோத் எனப்படும் காய்கறிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 0.5-1 கிலோ என்ற அளவில் உபயோகிக்கலாம்.



தாவர பூச்சிக்கொல்லிகள்
நிறைய தாவரங்களுக்கு பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளன. இத்தாவரங்களின் சாறுகள் மற்றும் இதர பண்படுத்தப்பட்ட பாகங்கள் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்திட உதவுகின்றன. இவ்வாறு உபயோகப்படும் தாவரங்களில் வேம்பு நன்கு செயல்படுகிறது.

வேம்பு
தோராயமாக வேம்பு 200 வகையான பூச்சிகள், வண்டுகள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெட்டுக்கிளிகள், இலையினை உண்ணும் பூச்சிகள், செடிப்பூச்சிகள், அசுவனி, பச்சை தத்துப்பூச்சி, புழுக்கள் மற்றும் அந்து பூச்சி போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த வேம்பு உதவுகிறது. வேம்பின் பாகங்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் வண்டுகளின் புழுக்கள், பட்டாம்பூச்சி மற்றும் இதர புழுக்கள் கட்டுப்படுத்த உதவும். இலை சுருட்டுப்புழு, தத்து பூச்சிகள், இலைப்புழு, போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. வண்டுகள், அபிட்ஸ், வெள்ளை பூச்சிகள், மாவுப்பூச்சி, வளர்ந்த பூச்சிகள், பழ வண்டுகள், சிலந்தி மைட்கள் போன்றவற்றையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

இதர பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
பெரும்பாலான இயற்கை விவசாயிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிறைய புதுமையாக பூச்சித்தாக்குதலை பயிர்களில் கட்டுப்படுத்தும் முறைகளை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த முறைகளில் அறிவியல் பூர்வமாக பரிசோதித்து பார்க்கப்படவில்லை எனினும் அவை பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றின் உபயோகத்தினை பற்றி விவசாயிகளின் பேசுவதை கேட்க முடிகிறது. விவசாயிகள் இக்கண்டுபிடிப்புகளை வெளியில் பொருட்களை வாங்காமல் அவர்கள் பண்ணையில் தயாரித்து உபயோகிக்க முயற்சிக்கலாம். பிரபலமடைந்த தயாரிப்பு முறைகளை கீழே காணலாம்.



மாட்டு சிறுநீர்
மாட்டு சிறுநீரினை தண்ணீரில் 1:20 என்ற விகிதத்தில் கலந்து இதனை பயிர்களில் தெளிப்பதன் மூலம் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.

நொதிக்கவைக்கப்பட்ட தயிர்
மத்திய இந்தியாவின் சில பாகங்களில் மோர் (நொதிக்கவைக்கப்பட்ட தயிரினை0 வெள்ளை ஈ, தத்து பூச்சி மற்றும் அசுவினி போன்றவற்றை கட்டுப்படுத்த உபயோகிக்கப்படுகிறது

தஸ்பர்ணி சாறு
அரைக்கப்பட்ட வேப்பிலை 5 கிலோ, நொச்சி இலைகள் 2 கிலோ, ஆடுதிண்ணா பாலை இலைகள் 2 கிலோ, பப்பாளி 2 கிலோ, டினோஸ்போரா கார்டிபோலியா இலைகள் 2 கோலோ, சீதாப்பழ மரம் இலைகள் 2 கிலோ, புங்க இலைகள் 2 கிலோ, ஆமணக்கு இலைகள் 2 கிலோ, அரளி 2 கிலோ, எருக்கு இலைகள் 2 கிலோ, பச்சை மிளகாய் அரைத்தது 2 கிலோ, பூண்டு நசுக்கியது 250 கிராம், மாட்டு சாணம் 3 கிலோ மற்றும் மாட்டு சிறுநீர் 5 லிட்டர் போன்றவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு நொதிக்கவைக்கவேண்டும். இக்கலவையினை தினமும் மூன்று முறை ஒழுங்காக கலக்கிவிடவும். நன்கு நசுக்கி பின்பு சாறு எடுக்கவும். இதனை ஆறு மாதத்திற்கு சேமித்து வைக்கலாம். இச்சாறு ஒரு ஏக்கருக்கு பாய்ச்சுவதற்கு போதுமானது.

நீம்அஸ்ட்டிரா
வேப்பிலை தண்ணீருடன் கலந்து அரைத்தது 5 கிலோ, இதனுடன் 5 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ மாட்டு சாணம் போன்றவற்றை கலந்து 24 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும். இந்த நொதித்தலின் போது இடையிடையில் கலக்கிவிடவும். பின்பு நன்கு பிழிந்து வடிகட்டி தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக தயாரிக்கவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்க உபயோகிக்கலாம். உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சிகளின் தாக்குதலையும் கட்டுப்படுத்த இந்த கரைசல் உதவுகிறது.

பிரம்மாஸ்டிரா
மூன்று கிலோ அரைத்த வேப்பிலையுடன் 10 லிட்டர் மாட்டு சிறுநீர் கலக்கவும். பின் 2 கிலோ அரைத்த சீதாப்பழ மர இலைகள், 2 கிலோ பப்பாளி மர இலைகள், 2 கிலோ மாதுளை இலைகள், 2 கிலோ கொய்யா மர இலைகள், போன்றவற்றை தண்ணீருடன் கலக்கவும். மேற்கூறிய இரண்டையும் கலக்கி 5 முறை இக்கரைசல் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு 24 நேரம் கழித்து வடிகட்டவும். இதனை பாட்டில்களில் 6 மாதம் வரை சேமித்துவைக்கலாம். 2-2.5 லிட்டர் கரைசலை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு உபயோகிக்கலாம். இது உறிஞ்சும் பூச்சிகள், பழ ஒட்டைபோடும் பூச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கலாம்.

அக்னியாஸ்டிரா
ஒரு கிலோ அரைக்கப்பட்ட நெய்வேலி காட்டாமணி இலைகள், 500 கிராம் மிளகாய், 500 கிராம் பூண்டு, 5 கிலோ வேப்பிலை போன்றவற்றை 10 லிட்டர் மாட்டு சிறுநீரில் கலக்கவும். இதனை 5 முறை அதன் அளவில் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு இக்கரைசலை வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைக்கலாம். 2-3 லிட்டர் கரைசலை தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக்கி ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கலாம். இது இலை சுருட்டுப்புழு, தண்டு, பழ ஒட்டை போடும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.





மூலம் : தேசிய இயற்கை வேளாண்மைக்கான மையம், காசியாபாத்
தொகுப்பு ரகுபதி நேரம் 10:44 am 0 கருத்துரைகள்

0 கருத்துரைகள்: