Monday 21 May 2012



தமிழரின் தானிய சேமிப்பு கிடங்கு  




நமது முன்னோர்கள் அறுவடை செய்த  பின்னர் நன்கு உலர்த்தி பயிரை வீடுகளில் உள்ள குழிகளில் சேமித்து வைதிருக்கும்  பழக்கம் இருந்து வந்தது ஆனால் அந்த  பழக்கம்  இப்போது அது வழக்குழைந்து விட்டது ஆனாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் அந்த முறையை பின்பற்றி வருகின்றானர்.  இப்போது  நாம் பார்க்கும் இடம் ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலை (அண்ணன் வீரப்பன் வாழ்ந்த காட்டு பகுதி) பகுதிகளில் பழங்குடி மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பின்பகுதிகளிலும் இந்த சேமிப்பு கிடங்கு இருக்கிறது. அதன் ஆழம் 10 அடி, அகலம்  5 அடி இதன் வாயிற் பகுதி 2-3 அடி உள்ளது.  இதன் உள் படுதி சுண்ணாம்பு கலவையினால் செய்யப்பட்டது. இந்த சேமிப்பு கிடங்கில் 2.5 டன் அளவு வரை தானியங்களை சேமிக்கலாம்   இப்பகுதியில்  திணை, சாமை, வரகு, கம்பு, சோளம் மற்றும் நெல்  முதலியவற்றை சேமிக்கலாம் குழி என்று மக்கள் அழைகிறார்கள். அதிக பட்சமாக இதனை 2 வருடங்கள் சேமித்து வைத்துள்ளனர். அய்யா பாலு அவர்கள் சேமிப்பு கிடங்குகளில் நாம் மிதிக்க கூடாது என்பதற்காக தான் அதன் மேலே கோலம் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள்  பின்பற்றி வந்துள்ளனர். 








நாம் இப்போது பார்க்கும் சேமிப்பு குழி  பழமையானது தற்போது இதில் தானியங்கள் சேமிக்க படவில்லை






                                                          முகப்பு தோற்றம் 









                                                             உள் பகுதி



இவர்தான் நமக்கு குழி பற்றிய தகவல் களை தந்தவர் 


வாயிற்பகுதி 











                                                                  உள் தோற்றம்

தமிழரின் தானிய சேமிப்பு கிடங்கு  காணொளி -1



தமிழரின் தானிய சேமிப்பு கிடங்கு  காணொளி -2






0 கருத்துரைகள்: