பல்பயிர் வேளாண்மை
வேளாண்மை என்ற சொல் பொருள் ஆழம் மிக்க சொல் . வேளாண்மை என்றால்
பிறர்க்கு உபகரணாம் செய்தலும், உதவி செய்தலும் ஆகும். அதே நேரத்தில் வேளாண்மை என்ற
சொல் உழவித் தொழிலையும் குறிக்கும்.
வேளாண் என்னும் சொல்லை வேள் + ஆள் என்று பிரிக்கலாம். வேள் என்றால்
மண் என்று பொருளாகும். ஆள் என்றால் ஆளுதல் என்னும் பொருலாகும். வேளாண் என்றால்
மண்ணை ஆள்பவர்கள் என்று பொருள். இதனால்
தான் தொல்காப்பியர் உழவர்களை வேளாண் மாந்தர்என்று குறிப்பிடுகிறார். வேளாண்
மந்தருடைய தொழில் உழவுத்தொழில் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
வேளாண் மாந்தர்க்கு
உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை
நிகழ்ச்சி
(தொல்காப்பியம் –
மரபு 81)
நாட்டை அரசன் ஆள்வது போல்
உழவர்கள் மண்ணை ஆளும் பெருமை உடையவர்களாக இருந்தனர்கள்.
உழவு என்றால் உழத்தல்
என்பதாகும். உழத்தல் என்றால் இடைவிடாது முயலும் உடல் முயற்சியைக்
குறிக்கும் சொல்லாகும். ஆகவே இடைவிடாது முயன்றால் தான் உழவுத் தொழிலைச் சிறப்பாகச்
செய்ய முடியும் என்பதை ஐயாயிரம் (5000) வருடங்களுக்கு முன்பே சொல்லி
வைத்துள்ளார்கள்;. அன்று முதல் இன்று வரை
உழைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் வளம் பெற்ற மாதிரி தெரியவில்லை. என்னுடைய
ஊரைச் சேர்ந்த ஒருவர் உழவுத் தொழிலில் இலாபம் இல்லை என்று சொல்லி நகரத்திற்குச்
சென்றுஇ பெட்டிக்கடை வைத்தார். அவரை ஊரில் உள்ளவர்கள் சிரித்தர்கள். பெட்டிக்கடை
வைத்தவர் 5 ஆண்டுகள் கழித்துக் கையில் புதுமனைப் புகுவிழா அழைப்பிதழைக் கொண்டு
வந்து எல்லோருக்கும் கொடுத்து அழைப்பு விடுத்தார்.
ஆனால் உழவன் நிலை என்ன? நான் என் நண்பர் தோட்டத்திற்கு சென்று
இருந்தேன். பழைய மாட்டுச்சாலை சட்டம் முறிந்து நின்றது. அதற்கு முட்டுக்
கொடுத்துக் கொண்டிருந்தார். இது தான் உழவன் நிலை. அவனுடைய விளைப்பொருளுக்கு
கட்டுப்படியான விலைக் கிடைப்பது கிடையாது.
இன்று இயற்கை விவசாயத்தினைப் பற்றிப் பரப்புரை செய்பவர்கள் பல் பயிர்
சாகுபடி பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். பல் பயிர் சாகுபடி செய்யலாம். கம்பு
பயிர் செய்யலாம் ஆனால் அதிர் அறுக்க ஆள்
கிடையாது. தினை பயிர் செய்யலாம் ஆனால் அறுவடைக்கு ஆள் கிடையாது.
பாசிப்பயறு உளுந்து போன்றவைகளைப் பயிர்ச் செய்யலாம். ப்றிக்க ஆள் கிடையாது
அப்படியே கிடைத்தாலும் மிகவும் குறைந்த கூலி தான் கொடுக்கிறார்கள்.
மாற்று என்ன சிந்தீப்பீர்!
உழவர்களே!
0 கருத்துரைகள்:
Post a Comment