Tuesday 30 March 2010

உணவு அவசியம்

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்களின் உடம்பில் சக்தி தேவைப்படும்பொழுது அதன் தூண்டுதலால் ஏற்படுவதுதான் பசி. இந்த பசி இல்லா உயிர் இல்லை. அப்படிப்பட்ட பசியை போக்க உணவு மிக அவசியம். பசியை படைத்த இயற்கை கூடவே அந்தந்த உயிர்களுக்கான உணவையும் படைத்துள்ளது. இருப்பினும் உலகெங்கும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது.






"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்

ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைமையில் பட்டினி சாவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உணவில்லை என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை உலகின் பணக்கார வரிசையில் உள்ள அமேரிக்கா போன்ற நாடுகளில் கூட பட்டினி சாவுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் மனிதனா? இயற்கையா?..






"மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....."

மேற்கண்ட பைபிள் வாசகம் சரி என்றால் பட்டினி சாவுக்கு காரணம் யார்? இதுதான் இன்றய கேள்வி... உண்டு கொழுப்பவன் ஒரு புறம் இருக்க, பட்டியால் சாவோர் மறுபுறம் ஏன்? மனிதனின் மாறுப்பட்ட கொள்கைகளால் மடிந்துபோகும் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லமை பெற்ற நாடுகளும் இருக்கு, சோமாலியா போன்ற வறுமைகள் உள்ள நாடுகளும் இருக்கு. இதில் எந்த மனுதருமம் பொது உடமைப் பற்றி பேச போகின்றது.



பசி என்றால் பத்தும் பறந்துபோகுமாம். ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்ன கொடுமை பாருங்கள்! இந்த நிலமைதான் இன்றைய இந்தியாவில் இருக்கின்றது. உலக பணக்காரர் வரிசைகளில் எட்டு இடங்கள் நமக்குதான். அதே போல் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் உணவின்றி பட்டினி. இதுதான் நம் நாட்டின் இறையாண்மை.





"வசதியிருக்கின்றவன் தரமாட்டான்

வயிறுப் பசித்தவன் விடமாட்டான்"

உண்மைதான் வயிறுப் பசித்தவன் ஒருநாள் பிச்சி சாப்பிடும் காலங்களும் வரலாம். இன்றுவரை நில உச்சவரம்பு சட்டம் இந்தியாவில் அமுல் படுத்த முடியால் இருப்பதற்கு காரணம் என்ன? பல நிலப்பிரபுகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதால்தானே!.



பசியில்லா உணர்வும் ருசிக்காது அதற்காக பசியே வாழ்கையாக இருப்பதும் வெட்ககேடு. ஆதி மனிதன் தொட்டு இன்றைய மனிதன் வரை பசிக்காக அவற்றிக்கான உணவுக்காக போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. குழுக்காளாக வாழ்ந்த மனித இனம் தனது உணவை சேமித்து வைக்கும் பழக்கம் வந்தது. இப்படி சேமித்த உணவுகளை வலியவர்கள் வந்து அபகரிப்பதும் இன்றைய தினம் வரை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வதுபோல்...

"பசியும் சுண்டல் ருசியும் போனால்,..

பக்தியில்லை பசனையில்லை

சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே!"



பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம். அதேபோல் மனிதன் வாழ்க்கை முறைகள் பசியும் உணவையும் பொருத்தே வளர்ந்து வருகின்றது. அப்படிப்பட்ட பசியை பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த இடுகைகளில் சிந்திப்போம்...
 
 
அதற்குமுன் பின்வரும் காணோளியை பாருங்கள்..



 
http://www.youtube.com/watch?v=SUErUpwsnzM&feature=player_embedded#
 

0 கருத்துரைகள்: