Friday, 2 October 2009

நாம் செய்ய வேண்டியது:

எண்ணியதைச் சொல்கிறேன்...

நாம் செய்ய வேண்டியது:

கடவுள் உண்டு என்பவர்க்கு...

அனைத்து மார்க்கத்தின் படி கடவுளை அடைய ஒரே வழி... அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவது.

கடவுள் இல்லை என்பவர்க்கு...

அன்பே கடவுள். அன்பால் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் வெல்ல முடியும்.

மக்கள் நலன் காக்க ஒரு நல்ல அரசு மேற்கொள்ள வேண்டியது:

1. நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வேண்டும். அதுவும் தரமான கல்வி வேண்டும்.

2. இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். பெரியவர்களை பாதுகாக்க வேண்டும்.

3. தாய் மொழி மீது பற்று வேண்டும். பிற மொழிகளையும் கற்க வழிவகை செய்ய வேண்டும்.

4. நல்ல கல்வி, நல்ல குடிநீர் மற்றும் நல்ல சாலைகள் வேண்டும். இவை மட்டுமே இலவசமாக வேண்டும். மற்ற இலவசங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

5. தனி மனித ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மீறுவோர் தண்டிக்கப்பட வேண்டும்.

6. சுத்தம் அவசியம் வேண்டும். சுகாதார சீர்கேடு செய்வோர் தண்டிக்கப்பட வேண்டும்.

7. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும்.

8. சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும். தக்க தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

9. பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும். இது பெயரளவில் இல்லாமல் நடைமுறையில் வேண்டும்.

10. பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்பட வேண்டும். அதோடு கள்ள சாராயம் பெருகாமல் இருக்க நடவடிக்கையும் வேண்டும்.

11. கஞ்சா, பான், குட்கா போன்ற போதை வஸ்துக்கள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். மீறி விற்போர் தண்டிக்கப்பட வேண்டும்.

12. பிச்சை, விபசாரம் அறவே ஒழிய வேண்டும். அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

13. ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக இருக்கும் காவல் துறை சீரமைக்கப்பட வேண்டும். காவல் துறையின் அணுகுமுறை மாறி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

14. அரசு ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டும். அதோடு அவர்களின் வேலை சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

15. மருத்துவமனைகள் சீரமைக்கப்பட வேண்டும். நவீன மருதுவ சாதனங்களை வைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் அளிக்க வேண்டும்.

16. இயல், இசை, நாடகம் இவற்றோடு சினிமாவையும் சேர்க்க வேண்டும். கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

17. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் நலன் காக்கப்பட வேண்டும். அவர்கள் திறம்பட முன்னேற நவீன உத்திகளை கற்றுத்தர வேண்டும். நீர்பாசன வசதிகளை உருவாக்கித் தர வேண்டும்.

18. நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கடித மற்றும் பேச்சு வார்த்தைகள் என்று இல்லாமல் அதிரடி நடவடிக்கைகள் வேண்டும்.

19. நீதிமன்றங்கள் மதிக்கப்பட வேண்டும். அதற்க்கு முதலில் ஆட்சியாளர்கள் நீதிமன்றங்களை மதிக்க வேண்டும். அதோடு நாடாளுமன்றமும் சட்டமன்றமும் நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு வேண்டும்.

20. தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்.

21. ஜாதிகள் அழிய வேண்டும். மதங்கள் மறைய வேண்டும். எங்கும் அமைதி வேண்டும்.

22. தீவிரவாதம் வேரோடு அறுக்கப்பட வேண்டும். வன்முறை அடக்கப்பட வேண்டும்.

23. பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதில் நடுநிலையும் வேண்டும்.

24. அரசியல் தூய்மையாக வேண்டும். அதற்க்கு அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும்.

25. ஊழலற்ற அரசு அமைய தன்னலமற்ற தலைவர்கள் வேண்டும். வீன் புகழ்ச்சி தவிற்கப்பட வேண்டும்.

26. நாட்டில் உள்ள எல்லா தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தையும் காக்க வேண்டும்.

27. இந்த காலத்திற்க்கு ஏற்ற சட்ட திருத்தம் வேண்டும். வரிகள் குவிய வேண்டும். நாடு செழிக்க வேண்டும்.

28. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். மாற்றங்கள் பயனுள்ளதாக வேண்டும்.

29. இக்காலத் தேவைக்கு ஏற்ப இராணுவத்தின் தரம் உயர வேண்டும். அதிலும் ஊழல் ஒழிய வேண்டும்.

30. அண்டை நாடுகளுடன் நட்பு வேண்டும். அதோடு நம் நாட்டின் மீது பயமும் வேண்டும்.

31. அணு ஆயுத சோதனை நடத்திட வேண்டும். அதில் தண்ணிறைவும் பெற வேண்டும்.

0 கருத்துரைகள்: